பிரதமர் மோடி ஒரு அருமையான மனிதர் என்று பாராட்டிய ட்ரம்ப், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி “ஒரு அற்புதமான மனிதர்” என்று பாராட்டி உள்ளார். மேலும் மோடி உடன் முந்தைய இரவு தொலைபேசியில் பேசியதை அவர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.74,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது. ரஷ்யா – உக்ரைன் […]

டெல்லியில் இருந்து ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை. இன்று ராய்ப்பூர் விமான நிலையத்தில் ஒரு அசாதாரண தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. டெல்லியில் இருந்து ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை. இததனால் விமான தரையிறங்கிய பிறகு, பயணிகள் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் விமானத்திற்குள் சிக்கிக் கொண்டனர். பிற்பகல் 2:25 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த […]

93 வயது முதியவர் ஒருவர் தனது மனைவிக்கு தாலி வாங்க நகைக் கடைக்கு சென்ற போது, கடைக்காரரின் தாராள மனப்பான்மையால் அதற்கு வெறும் ரூ.20 செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் அவற்றில் சில வீடியோக்கள் தான் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சம்பாஜிநகரில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான […]

திரைத்துறையை பொறுத்தவரை ஓரிரு படங்கள் சேர்ந்து நடித்தாலே நடிகர்கள் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் பரவத் தொடங்கிவிடும். இந்த கிசுகிசுக்களில் சிக்காமல் இருக்கும் பிரபலங்கள் மிகவும் குறைவு என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா ஜோடி அடிக்கடி இதுபோன்ற கிசுகிசு செய்திகளில் சிக்கி வருகின்றனர். மேலும் இந்த ஜோடி டேட்டிங்கில் இருந்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த […]

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக அந்நாட்டு உச்ச தலைவர் காமெனி தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு முழு அளவிலான பிராந்திய மோதலைத் தூண்டும் என்று ஈரான் எச்சரித்தது. “எந்தவொரு அமெரிக்க தலையீடும் இப்பகுதியில் ஒரு முழுமையான போருக்கு வழிவகுக்கும்” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் […]