அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பிறகு, ஹாஸ்டலில் இருந்து மாணவர்கள் குதிக்கும் ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்து தொடர்பான ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் புகையிலிருந்து தப்பிக்க பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்திலிருந்து மாணவர்கள் குதித்துள்ளனர். பதைபதைக்க […]

திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவாத் சமீபத்தில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் “ அறிவியல் பூர்வமான […]

தமிழக ADGP ஹெச்.எம். ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் அருகே நடந்த காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தின் உயர் காவல்துறை அதிகாரியான ADGP ஹெச்.எம். ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை, அரசு உள்துறை செயலாளர் இன்று வெளியிட்டார். […]