மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், புதிய அறிகுறிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. LF.7, XFG, JN.1, NB.1.8.1 உள்ளிட்ட பல மாறுபாடுகள் கொரோனா பரவலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில் NB.1.8.1 என்ற புதிய துணை வகைகளில் ஒன்றாகும். இது Omicron குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.. ஆம், 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து உருமாற்றம் அடைந்து வரும் […]

உட்கட்சி, கூட்டணி பிரச்சனைகளையும் மறைப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டு தனமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தஞ்சையில் அரசு சார்பில் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது தஞ்சை மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார். மேலும் “ தஞ்சை மக்களுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. தஞ்சை மண்ணில் ஒவ்வொரு […]

மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே, ஜூலை 15 முதல் தமிழ்நாடு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சையில் அரசு சார்பில் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், ரூ.1194 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டியும் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது தஞ்சை மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு […]

டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் ஹாங்காங்கில் அவசரமாக தரைறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் ஹாங்காங் விமான நிலையத்திற்கே சென்றது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தால் இயக்கப்படும் AI315 விமானம், திட்டமிட்டபடி ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டது, ஆனால் விமானி ஒரு கணினி செயலிழப்பைக் கண்டறிந்ததால் நடுவானில் திருப்பி அனுப்பப்பட்டது […]

லக்னோ வந்த ஹஜ் பயணிகள் விமானத்தின் சக்கரத்தில் தரையரங்கும் புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லக்னோவின் சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்திற்கு 250 ஹஜ் பயணிகளுடன் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10.45 மணிக்கு ஜெட்டாவிலிருந்து புறப்பட்ட SV 3112 என்ற விமானம் இன்று காலை […]