இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தனது நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.. இந்த நிலையில் விமானப் பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு குறித்த தனது வழிமுறைகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றது. தகுதிவாய்ந்த ஆணையத்தின் (CA) ஒப்புதலைத் தொடர்ந்து, முந்தைய உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், சீமான் என இந்த தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. கரூரில் துயர சம்பவத்திற்கு பின் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியிருந்தார்.. மறுபுறம் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் […]

சமீபகாலமாக இணையத்தில் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வகை இணைய மோசடி நடந்து வருகிறது.. இது ஒரு சாதாரண கோப்பு அல்லது சந்தேகமான இமெயில் அல்ல — மிகவும் வைரலாகப் பரவும் “19-நிமிட வீடியோ” என்று கூறி அனுப்பப்படும் ஒரு போலி லிங்க் தான். இந்த மோசடி சோஷியல் என்ஜினியரிங் முறையை பயன்படுத்துகிறது. அதாவது, “என்ன வீடியோ இது?” என்ற ஆர்வத்தை பயன்படுத்தி அவர்கள் […]

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக எம்.பிக்கள் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.. திருப்பரங்குன்றத்தில் மத மோதல்களை உருவாக்க முயல்வதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது.. கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.. கேள்வி நேரம் முடிந்த பின்னர் பேசலாம் என்று சபாநாயகர் கூறிய நிலையில், அதனை ஏற்காத திமுக எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.. நீதி வேண்டும், […]

திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது.. இதையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.. அதை விசாரித்த ஜி.ஆர். சுவாமிநாதன் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் […]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினத்தை ஒட்டி மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்தினார்.. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ தனிக்கட்சி தொடங்கப் போவதாக நான் எப்போது கூறினேன்? தனிக்கட்சியை தொடங்க இருப்பதாக நான் எங்கேயும் எந்த சூழலிலும் சொல்லவில்லை.. மரியாதை நிமித்தமாகவே அமித்ஷாவை டெல்லியில் […]

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்கு பதிலாக மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது.. இதையடுத்து மனுதாரர் […]

குளிர்காலம் வந்துவிட்டாலே சில உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.. ஏற்கனவே சில வகையான நோய்களைக் கொண்டவர்களுக்கு இது அதிக சிக்கல்களைக் கொண்டுவரும். குறிப்பாக தசைகள் மற்றும் மூட்டுகள் விறைப்பாக மாறுவதால், இந்த பருவத்தில் மூட்டுவலி, மூட்டு வலி மற்றும் வாத நோய் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும். குளிர்காலத்தில் அவர்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் குறித்து அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மூட்டு வலி உள்ளவர்கள் இந்த பருவத்தில் தேநீர் […]

கடந்த செவ்வாய் கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் குழப்பம் தொடரும் நிலையில், இன்னும் இன்டிகோ விமான சேவையைச் சுற்றி செயல்பாட்டு பிரச்சினைகள் நீடித்து வரும் காரணத்தால், கடந்த 3 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை, சமூக வலைதளங்களில் வந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில், இண்டிகோ கவுண்டர்களின் முன் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.பல பயணிகள் தங்கள் விமானங்கள் தாமதமாவது, ரத்து […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. தற்போது, ரெப்போ விகிதம் 5.50% ஆக உள்ளது. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25% ஆக செய்துள்ளது. […]