அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அணு ஆயுத பரிசோதனைகளை மீண்டும் தொடங்கியதற்கான தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் தங்களது ஆயுத திட்டங்களைத் தொடரும் நிலையில், அமெரிக்கா மட்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவிடம் “உலகத்தை 150 முறை வெடிக்கச் செய்யும் அளவு” அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் டிரம்ப் ஒப்புக்கொண்டார். CBS சேனலின் 60 Minutes நிகழ்ச்சியில் […]
கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.. 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் […]
சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை விதிக்க கோரிய மனுவை ஏற்க உச்ச் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.. இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.. இருப்பினும் குழந்தைகள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிடும் போது, அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவது மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பலர் […]
நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் (பிஓடி) மாதிரியின் கீழ் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளதாக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விதிகளின்படி, நெடுஞ்சாலையின் எந்தவொரு பிரிவிலும் ஒரு வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டால், அந்தத் திட்டத்தின் கட்டுமானத்திற்குப் பொறுப்பான ஒப்பந்ததாரர்கள் நேரடியாகப் பொறுப்பாவார்கள். […]
தரும்புரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தீய, சதிச்செயலை தேர்தல் ஆணையம் செய்கிறது.. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள இப்போது திருத்தம் ஏன்? பிகார் மாநிலத்தில் செய்ததைப் போன்று தமிழ்நாட்டிலும் செய்யத் துடிக்கின்றனர்.. 2026 தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டியலை கையில் எடுத்துள்ளனர். பிகாரில் […]
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. கோவை விமான நிலையத்தின் பின்புறம் நேற்றிரவு காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த 21 வயதாகும் இந்த மாணவி கோவையில் உள்ள கல்லூரி ஒன்றி படித்து வருகிறார்.. இந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் தனது ஆண் […]
பணமோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.3,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அமலாக்க இயக்குநரகம் (ED) அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்துடன் (Reliance Anil Ambani Group) தொடர்புடைய நிறுவனங்களின் ரூ. 3,084 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.. இந்த உத்தரவு 2025 அக்டோபர் 31 அன்று, பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) பிரிவு 5(1) அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது. முடக்கப்பட்ட […]
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்… எனினும் செங்கோட்டையன் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார்.. பசும்பொன் முத்துராமலிங்க […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தெலுங்கானாவின் ரங்கா ரெட்டியில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர்.. 18 பேர் காயமடைந்தனர். செவெல்லா அருகே தெலுங்கானா சாலை போக்குவரத்துக் கழக (RTC) பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, டிப்பரில் இருந்த சரளைக் கற்கள் பேருந்தின் மீது விழுந்தன. மோதிய பிறகு பேருந்தில் இருந்த பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. […]

