fbpx

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு …

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை.. 2 வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது.. கொரோனாவில் இருந்து படிப்படியாக உலகம் மீண்டு வந்த நிலையில், கடந்த நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் மாறுபாடு உலகை அச்சுறுத்தி வருகிறது. …

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை …

சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது..

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் சராசரி ஒரு நாள் பாதிப்பு 15,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.. எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி …

மே மாதத்தில் மட்டும் 46,000க்கும் மேற்பட்ட இந்திய பயனர்களின் ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.

குழந்தை பாலியல் சுரண்டல், நிர்வாணம் உள்ளிட்ட பல விதிமீறல்களுக்காக 43,656 கணக்குகளை நீக்கியதாக ட்விட்டர் நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.. அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக 2,870 ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏப்ரல் …

பழைய உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. தனது தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.. ஆனால் ஓபிஎஸ் இரட்டை தலைமையே வேண்டும் என்று …

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபித்தார்..

மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், உத்தவ் அரசுக்கு எதிராக சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்களே திரண்டதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. சிவசேனாவின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு …

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அர்ச்சகர் பள்ளிக்கு ஆகம ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகம் முழுவதும் கடந்த 2007-ம் ஆகம் ஆசிரியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.. ஆனால் சிவாச்சாரியார்கள் தொடர்ந்து வழக்கு காரணமாக 2008-ம் ஆண்டு அந்த பள்ளிகள் மூடப்பட்டன.. இதனிடையே மீண்டும் அர்ச்சகர் பள்ளிகளை திறக்க 2015-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.. இதனால் பல …

2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தார் ஆனால் பாஜக தலைவர்கள் பலரும், இந்த கூட்டணி ஆட்சி சில மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.. இந்நிலையில் இந்த கூட்டணிக்கு எதிராக ஆளுங்கட்சி …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ. 38,480 விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து …