Artificial Intelligence – AI, அதாவது செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக நடைபெறும் முன்னேற்றங்கள், மனிதர்களின் வேலைவாய்ப்பை எதிர்பார்த்ததை விட மிக விரைவாக மாற்றிவிடக்கூடும் என எச்சரித்துள்ளார் முன்னணி AI நிபுணர் டாக்டர் ரோமன் யாம்போல்ஸ்கி. அவரின் இந்த கருத்து உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.. லாட்வியாவில் பிறந்து, அமெரிக்காவின் லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக பணியாற்றி வரும் அவர், Artificial General Intelligence (AGI) என்ற மனிதரைப் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் சமீப காலமாக பலர் எதிர்கொள்ளும் முக்கிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று கொழுப்பு கல்லீரல் ஆகும். லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறும். நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 30-40 சதவீதம் பேர் மது அருந்தாத கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், இந்த நோய் இவ்வளவு அதிகரிப்பதற்கான […]

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக, பிப்ரவரி 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில், சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய, இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று […]

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு, On-Screen Marking (OSM) எனப்படும் திரைமுக (டிஜிட்டல்) மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறை பிப்ரவரி 17, 2026 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி அனைத்து இணைப்பு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் CBSE அறிவிப்பு அனுப்பியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், மதிப்பீட்டு […]

இந்திய பொருளாதாரத்தின் தந்தை, ஆசிரியர், தத்துவஞானி, அரச ஆலோசகர் என பன்முகங்களை கொண்டவர் சாணக்கியர். அவர் தனது சாணக்கிய நிதி என்ற புத்தகத்தில் மனித வாழ்க்கையின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளார். அதில், எதிரிகளை எவ்வாறு கையாள்வது என்பதையும் அவர் கூறினார். எதிரிகளின் தன்மை, அவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது, எதிரியை தோற்கடிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் தாக்க சரியான நேரம் போன்ற பல விஷயங்களை அவர் விளக்கினார். […]

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கோடிக்கணக்கான ரூபாய் கேட்டு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. வாட்ஸ் வாய்ஸ் நோட் மூலம் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது.. இதனால் மும்பை போலீசார் அவரது வீட்டிற்கு வெளியே பாதுகாப்பை அதிகரித்து அனுப்புநரைக் கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் மும்பையில் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் […]

தற்போதைய விலைவாசி உயர்வு அல்லது பணவீக்கத்தைப் பார்த்தாலே பலருக்கு தலைசுற்றுகிறது. நாம் உழைத்து சம்பாதித்த அனைத்தும் செலவழிக்கப்படுகின்றன, சேமிப்பு ஒரு கனவு போல் தெரிகிறது. இதுபோன்ற காலகட்டத்தில், எந்த ஆபத்தும் இல்லாமல் நம் பணத்திற்கு எங்கிருந்து பாதுகாப்பு கிடைக்கும், அது தபால் அலுவலகம். ஆம், தபால் அலுவலகத்தின் தொடர்ச்சியான வைப்புத்தொகை (RD) திட்டம் ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் ஒரு உயிர்நாடி போன்றது. உங்கள் பணத்திற்கு அரசாங்க உத்தரவாதம் இருப்பதால், சந்தை […]

வங்கதேசத்தின் மைமென்சிங்கில், ஒரு இந்து தொழிலதிபர் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.. உயிரிழந்தவர், 62 வயதான சுசென் சந்திர சர்க்கார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. அவர் ஒரு அரிசி வியாபாரி. சுசென் சர்க்கார் தனது கடைக்குள் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஷட்டர்களை மூடிவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும், திரிஷால் காவல் நிலையத் தலைவர் […]