என்னை பற்றிய அவதூறுகளை பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் திருமணங்களை நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் நான் அதிகமாக பங்கேற்கிறேன். 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான 7420 கோடி […]

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பைக் டாக்ஸி சேவை தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் 2020 இல் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இனி மாநில அரசுகள், வெள்ளை போர்டு பைக்களை Rapido, Ola மற்றும் Uber போன்ற பகிரப்பட்ட பயணத்திற்கான அனுமதிக்கும் கட்டமைப்பை வழங்குகிறது. புதிய வழிகாட்டுதல்களின் கீழ், போக்குவரத்து அல்லாத மோட்டார் சைக்கிள்களுக்கு அங்கீகாரம் அளிக்க மாநில அரசுகள் தினசரி, […]

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு குவாட் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து குவாட் குழுவின் (அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) வெளியுறவு அமைச்சர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். கண்டிக்கத்தக்க செயலுக்கு பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும் “ எல்லை தாண்டிய […]

ரயில் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த மொபைல் RailOne செயலியை இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.. நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரயில் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த மொபைல் RailOne செயலியை இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.. […]

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று பதிவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த அஜித்தின் தாயார் மற்றும் ரிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ரொம்ப Sorry-மா. கடுமையான நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறேன். […]

DGP சார், கைது செய்யப்பட்ட காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டுபோடப்பபடுவார்களா? அல்லது தப்பி ஓட முயற்சி என்று ஏதாவது நல்ல செய்தி வருமா?? என்று திமுக எம்.எல்.ஏ கேள்வி எழுப்பி உள்ளார். திருச்சி திமுக எம்.எல்.ஏ சிவகங்கை லாக் அப் மரணம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் பதிவில் “ DGP சார், கைது செய்யப்பட்ட காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டுபோடப்பபடுவார்களா? அல்லது தப்பி […]

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.. இந்த நிலையில் இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் பணி தொடங்கி உள்ளது. புரொபேஷனரி அதிகாரி/மேலாண்மை பயிற்சிப் பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 21 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை மூலம் பல்வேறு வங்கிகளில் 5208 காலியிடங்களை நிரப்பப்பட உள்ளது. IBPS PO ஆட்சேர்ப்பு 2025: காலியிடங்கள் தகுதி விண்ணப்பதாரர்கள் ஜூலை […]

அரசு ஊழியர்களுக்கான திருமண முன் பணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கான திருமண முன் பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இனி பொதுவாக ரூ.5 லட்சம் திருமண முன் பணமாக வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10,000, ஆண் ஊழியர்களுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. […]