எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கோவையில் மக்களிடையே உரையாற்றிய அவர் “ அறநிலையத்துறையின் நிதியை எடுத்து கல்லூரியை கட்டுவது எந்த விதத்தில் நியாயம்.. அந்த பணம் இவர்களை உறுத்துகிறது.. கோயில் கட்டுவதற்காக உண்டியலில் பணம் போடுகிறீர்கள்.. அது அறநிலையத் […]

ராஜஸ்தானில் இன்று இந்திய விமானப்படையின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமம் அருகே இன்று இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ரத்தன்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் சமநிலையற்றதாகத் […]

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மாபெரும் போராட்டம் நடத்துவேன் என்று சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்காமல் விசாரணை கைதிகள் சிறையில் இருப்பது இங்கு தான் நடக்கிறது.. சிறை என்றால் சிறை காவலர்கள் கைதிகளை பாதுகாக்க வேண்டும்.. வழக்கு இருக்கு நீதிமன்றம் உள்ளது.. நாங்கள் குற்றவாளியா, நிரபராதியா என்பதை […]

ரூ. 76 லட்சம் மோசடி செய்த புகாரில் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் PA வேதிகா கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல்துறையினர் ஆலியா பட்டின் முன்னாள் செயலாளர் வேதிகா ஷெட்டியை கைது செய்துள்ளனர். வேதிகா ஷெட்டி ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 76 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி மே 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. போலி பில்களின் […]

மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது “ உங்களை போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் போது எனக்கு எனர்ஜி வந்துவிடுகிறது. மாணவர்கள் அதிகமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் உடனே ஓ.கே சொல்லிவிடுவேன்.. இந்த ஜமால் முகமது கல்லூரிக்கு நான் வருவது இது முதன்முறை அல்ல.. […]

மும்பையில் உள்ள MLA விருந்தினர் மாளிகையில் ஒரு கேன்டீன் ஊழியரை சிவசேனா (ஷிண்டே பிரிவு) சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.. புல்தானா தொகுதி MLA சஞ்சய் கெய்க்வாட், விருந்தினர் மாளிகை கேன்டீனில் வழங்கப்படும் உணவின் தரத்தில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.. இதனால் அந்த கேண்டீன் ஊழியரை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் மோசமாக இருந்ததாகவும், அவர் ஊழியர்களை கடுமையாக சாடியதாகவும், […]