தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும். தவிர, மேற்கு திசை காற்றில் […]

பள்ளிக்கல்வி அமைச்சு பணியாளர்களுக்கு ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின்படி முதுநிலை ஆசிரியர்களாக பணிமாறுதல் அளிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும். அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் […]

திமுக ஆட்சி ஏற்ற பிறகு 67 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் போது திருவெறும்பூர் தொகுதியில் பேசிய அவர், “திமுகவின் 51 மாத ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஏதும் நன்மை செய்துள்ளார்களா? கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் 505 அறிக்கையில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றாமல் 98 சதவிகிதம் நிறைவேற்றியதாக பச்சைப் பொய்யைக் கூறி […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லகண்ணு ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவர் ஆவார். இவர் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்தவர். 1924-ம் ஆண்டு பிறந்தவர். தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவராக உள்ளவர். இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் […]

1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் வேளாண் பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க மானியம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து […]

கூல்ஸ்கல்ப்டிங் எனப்படும் எந்திரத்தைப் பயன்படுத்தி கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சைகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ 3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டிருந்த உடல் எடைக் குறைப்பு விளம்பரம் புகார் மற்றும் விளம்பர கண்காணிப்பு மூலம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது. பரிசோதனையில், இந்நிறுவனம் , எடை இழப்பு பற்றிய மிகைப்படுத்தப்பட்ட அறிவிப்புகளை […]

வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரத்தை மானிய விலையில் பெற விரும்பும் ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். சமூக நலத்துறையின் சார்பில் மகளிர் வாழ்வாதாரத்தை பொருளாதாரம் ரீதியாக மேம்படுத்த ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் […]

நீங்கள் வாங்கும் சொத்து அல்லது உங்கள் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு பட்டா எப்படி வாங்குவது என்பதை பார்க்கலாம். நில பட்டா வாங்க, முதலில் உங்கள் சொத்து எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குள் வருகிறதோ அங்குள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுக வேண்டும். பின்னர், இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது அல்லது நேரில் சென்று விண்ணப்பிப்பது என இரண்டு வழிகளில் பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, தமிழ்நாடு அரசின் மின்-சேவைகள் இணையதளமான eservices.tn.gov.in சென்று, […]

அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு […]

தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யக் கூடாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தனியாரிடமிருந்து ரூ.80,000 கோடி செலவில் 2,200 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்ய இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பல கேள்விகளை எழுப்புகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்பு ‘தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை குறைத்து மாசற்ற மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 20,000 மெகாவாட் […]