75% பொது விநியோகத் திட்டப் பயனாளர்களுக்கு முகப்பதிவு அங்கீகாரம் வாயிலாக உணவு தானியங்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், நியாய விலைக்கடைகளில் பயனாளிகளின் முக அடையாள அங்கீகார நடைமுறை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கடவுகளின் அடிப்படையில் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட:டு […]
பிரதமரின் கர்ப்பிணி பெண்களுக்கான நலத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டு ஜூலை மாதம் வரை 4.05 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பேறுகால பயன்களைப் பெற்றுள்ளனர். இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், 72.22 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை, குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், பழங்குடியின தாய்மார்கள் என அனைத்து மகளிரும் பயனடையும் வகையில் […]
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் […]
ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.128.43 கோடி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 05.11.2022 முதல் ஆவின் பால் கொள்முதல் விலை பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32/-லிருந்து ரூ.35/-ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41/-லிருந்து ரூ.44/- ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களிடையே கறவை […]
மனம், உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பள்ளி மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று தொடங்கிவைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் […]
சென்னை மாநகராட்சியில் போலி வாக்காளர்களால் தான் திமுக வெற்றி பெறுகிறது. மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார்; ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆட்சியில் இருக்கும் திமுக தான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் […]
தமிழகத்தின் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.2,157 கோடி செலவில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.2,157 கோடி செலவில் நான்குவழிச் சாலை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சென்னை, புதுச்சேரி, […]
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து எந்த அரசியல் கட்சியும் இதுவரை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 7-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து இதுவரை (ஆகஸ்ட் 7 காலை 10 மணி வரை) எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும், உரிமை கோரல் தொடர்பான எவ்வித மனுவும் […]
பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 2021 முதல் 2025 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. இத்திட்டத்தில் மானியம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளை பொருள் என்ற முறையிலும் மற்றும் அனைத்து உணவு சார்ந்த தொழில்களுக்கும் (புதிய மற்றும் விரிவாக்கம்) செயல்படுத்தப்படுகிறது. […]
கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் டிடிஎஸ் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது […]

