சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல காவல்துறை உத்தரவு. போராட்டத்தை தொடர்வதால் பொது அமைதி, பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுகிறது. உத்தரவை மீறி போராட்டத்தை தொடர்ந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை. சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களில் சில வார்டுகள் தவிர மற்ற பகுதிகளில் தூய்மைப்பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. […]

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் […]

பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், ‘மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்கென அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையைத் தற்போது மாநில அரசிடம் கடந்த ஆண்டு அளித்தது. மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. 2024 ஜூலை 1-ம் தேதி […]

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவிகள் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சுடிதார் மீது ஒவர்கோட் அணியும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதனை பின்பற்றி புதுச்சேரியிலும் சீருடையில் மாற்றம் கொண்டுவர கடந்த 2013ம் ஆண்டு கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால் சீருடை […]

தனது தந்தையை கொலை செய்த விவகாரத்தில், சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜ்குமாரை 17 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி மாணவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட ஒழுங்கை பராமரிப்பதும், குற்றங்கள் நிகழா வண்ணம் தடுப்பதும் தான் காவல்துறையின் கடமை என்பதை இந்த திராவிட மாடல் அரசு நிர்வாகம் உணருமா…? என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி […]

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் வரும் 12ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று கொடுக்கும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று கொடுக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் […]

மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், ஊட்டச்சத்து, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட வசதிகளை கட்டணமின்றி மத்திய அரசு அளித்து வருகிறது. தேசிய மக்கள் தொகை ஆணையம் அமைத்துள்ள மக்கள் தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்ப குழுவின் அறிக்கையின்படி 2011-ம் ஆண்டு முதல் 2036-ம் ஆண்டுக்கு இடையேயான காலகட்டத்தில் மொத்த மக்கள்தொகையில் மூத்த குடிமக்கள் (60 வயது மற்றும் அதற்கு மேல்) விகிதம் 2011-ம் ஆண்டில் 10 கோடியாக அதிகரித்த நிலையில், 2036-ம் ஆண்டில் […]

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து எந்த அரசியல் கட்சியும் இதுவரை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும், உரிமை கோரல் தொடர்பான எவ்வித மனுவும் பெறப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. […]

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகின. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் […]

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் […]