தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில், தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த ஆலைக்கு அடிக்கல் […]
அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் […]
டிஎன்பிஎஸ்சி மூலமாக, 400 உதவி பொறியாளர்கள், 1,850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய மின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கள உதவியாளர், கேங்மேன், லைன்மேன் போன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். மின் வாரிய பணியாளர்கள் வாரியத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த […]
துல்லியமான வாக்காளர் பட்டியல்கள் ஜனநாயகத்தின் அடித்தளம். தேர்தல் பதிவு அதிகாரிகள், உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட வாக்காளர் பட்டியல் பொறிமுறை, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் நிறைய கடின உழைப்பைச் செய்து முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான வருடாந்திர ஊதியத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துவதில் […]
நாட்டில் மொத்தம் 1,78,184 ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மையங்கள் மூலம் சுகாதார பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்களில் விரிவான சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய்த் தடுப்பு முறைகள், தொற்று மற்றும் தொற்றாத நோய்களுக்கான சிகிச்சைகள், குழந்தைகள் நலன் மற்றும் இதர சுகாதார சேவைகளும் இந்த மையங்களில் வழங்கப்படும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. […]
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வியாண்டில் (2025-26) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்கள் பங்கேற்கலாம். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் […]
அரசுப் பள்ளிகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர மாநில அடைவு ஆய்வு மற்றும் அடிப்படை கற்றல் நிலை மதிப்பீடுகளின் அடிப்படையில் […]
இயற்கை வேளாண் பொருட்களைத் தேடி வாங்கும் அளவுக்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மற்றும் ‘We The Leader Foundation’ என்ற அமைப்பின் சார்பில் இளையோர் வேளாண் மாநாடு நேற்று நடை பெற்றது. நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவரும், அமைப்பின் தலைமை ஊக்குவிப்பாளருமான அண்ணாமலை, இந்திய பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மையின் பங்கு மிகக் குறைவாக இருக்கிறது. அதை மாற்றக்கூடிய […]
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 6 முதல் 8-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது […]
பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் பதிவு செய்யப்பட்ட அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதி செய்வதாக உள்ளது. முறைசாரா துறையில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு இதுபோன்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படுவது சுதந்திரத்திற்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய […]

