சமூக பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல்லாக, மிகவும் எளிய நிலையில் உள்ள மற்றும் பெற்றோரின் ஆதரவை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு “அன்பு கரங்கள்” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிடக்கூடாது என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த உதவித்தொகை, […]

திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தற்போது வரை மாணவனின் இறப்பிற்கு காரணத்தைக் காவல்துறை கண்டுபிடிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் இரண்டு […]

சென்னை தேனாம்பேட்டையில் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டார். சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம் பெண், சென்னை தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வியாழக்கிழமை பணி முடிந்து பைக் டாக்ஸி மூலம் வீட்டுக்குச் சென்றபோது, அந்த பைக் டாக்ஸியை ஓட்டிய நபர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை […]

கிராமப்புறங்களில் “அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்தை அடைய அடிப்படை வசதிகளுடன் கூடிய உறுதியான வீடுகளைக் கட்டுவதற்கு தகுதியான கிராமப்புற குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக, ஏப்ரல் 1, 2016 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், 2016-17 முதல் 2023-24 நிதியாண்டில் 2.95 கோடி வீடுகளைக் கட்டுவதற்கு உதவி வழங்குவதே ஆரம்ப இலக்காக இருந்தது. […]

இந்தியாவின் நம்பகமான பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘சுதந்திர தின திட்டத்தை’ ஆகஸ்ட் 1, 2025 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக சோதித்துப் பார்க்க, வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.1 விலையில் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த முயற்சி, இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இந்தியாவில் […]

தமிழகத்தில் இன்று முதல் 7-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக நாளை முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை […]

மக்கள் பிரச்சினைகளுக்காக முதன்முதலாக குரல் கொடுப்பது அதிமுக தான் என கோவில்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர்; திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. எப்போது இந்த ஆட்சி அகற்றப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். […]

அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ஜேஇஇ, நீட் உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளிப்​ப​தற்​காக 236 வட்​டார உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் சகண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் ; உயர் கல்விக்கான நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்காக வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, […]

கன்னியாகுமரியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரிக்கு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இஸ்லாமிய அமைப்பான குமரி டிரஸ்ட் என்ற அமைப்பின் சார்பில் இன்று ஒரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அவர்களை அழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மற்றொரு இஸ்லாமிய அமைப்பை […]

தமிழகம் முழுவதும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையிலான ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்குடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தை அனைத்து துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயர்த்திக் காட்டியுள்ளோம். அந்த வகையில், சுகாதாரத் துறை […]