தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு தனிநபர் கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், நலிவடைந்த பழங்குடியினர் (PVTG), திருநங்கைகளை (மூன்றாம் பாலினத்தவர்) கொண்டு சிறப்பு சுய உதவிக் குழுக்களை அமைப்பதன் வாயிலாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அவர்களின் வறுமை மற்றும் பாதிப்புகளை குறைத்து, வாழ்வாதாரம் மேம்படுவதற்கான முறையான முயற்சிகளை […]

2026 பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ய ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கு ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும். பத்ம விபூஷன், பத்ம பூஷன், […]

வரும் 01.09.2025 முதல் ஸ்பீட் போஸ்ட் ( விரைவு அஞ்சல்) மூலம் தான் அனுப்ப வேண்டும். பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல், தபால் துறை, செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் செயல்திறனை மேம்படுத்தவும், விரைவு அஞ்சல் மற்றும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவைகளை நினைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அம்சங்களைச் சேர்ப்பதற்கும் கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000., இன்னும் 30 நாட்களில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது. பின்னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டது. இதை பெறுவதற்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், நான்கு சக்கர வாகனம் (கார், ஜீப் போன்றவை) வைத்திருக்கும் குடும்பங்களைச் […]

இன்று முதல் ஆகஸ்ட் 5 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, ஒருசில இடங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 5 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 2-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய […]

வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடைகள் உரிமம் தொடர்பான தற்போதைய சட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ல் 85,649-ஆக இருந்த வணிக உரிமங்களின் எண்ணிக்கை, பழனிசாமி ஆட்சியில் 2020-21ல் 2,05,100 ஆக உயர்ந்தது. அதேபோல, 2011-12ல் ரூ.5.40 கோடியாக இருந்த உரிமக் கட்டணம் பழனிசாமி ஆட்சியில் ரூ.12.90 […]

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்கள் பங்கேற்கலாம். […]

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த ஆசிரியர்கள் அதில் திருத்தம் மேற்கொள்ளலாம் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (என்எஸ்எஸ்) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு அனைத்து வகை பள்ளிகளையும் சேர்ந்த ஆசிரியர்கள் ‘எமிஸ்’ இணையதளம் வாயிலாக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி […]

நடப்பு கல்வியாண்டுக்கான (2025 – 26) பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2026 மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து பொதுத் தேர்வு துவங்கி ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையில் நடைபெறவுள்ளது. பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ள நாட்காட்டியின் படி மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு, காலாண்டு செப்டம்பர் […]

டிஎன்​பிஎஸ்சி தேர்வு எழுதும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள் சென்​னை​யில் நடக்கிறது. தகு​தி​யுள்ள மாற்​றுத்திற​னாளி​கள் வகுப்பு​களில் பங்​கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் அனைத்து வகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நடத்தப்படும் குரூப்-2, 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு […]