இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை ஐ.பி.பி.எஸ் (IBPS) அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு கனரா வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது. இதில் தற்போது […]

அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் நாளை காலை 11.00 மணியளவில் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சலகங்களுடன் தொடர்புடைய ஓய்வூதியதாரர்கள் ஏதாவது புகார்கள் இருப்பின் அவற்றை தபால் மூலமாகவும், மின்னஞ்சல் (dochennaicitycentral@indiapost.gov.in) […]

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 காரிஃப் பருவத்திலிருந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்குத் தேவை சார்ந்ததாகவும் தன்னார்வ அடிப்படையிலானதும் ஆகும். இருப்பினும், கடன் பெறாத விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் உள்ளிட்ட விவசாயிகளின் காப்பீட்டுத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பதிவு செய்யப்பட்ட மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 2022-23 […]

மும்பை – எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்த காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புனே வரையிலான எக்ஸ்பிரஸ்வேயில் , ராய்காட் மாவட்டத்தின் கோபோலி என்ற இடத்தில் டிரக் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென பிரேக் செயலிழந்ததால் டிரக் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த சொகுசு கார்கள் […]

தமிழகத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்காக மத்திய அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய காலணி உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ் 1 ஆண்டு கால பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் 6 மாத கால பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், காலணி தொழில்நுட்பத்தில் முதுகலை டிப்பளமோ ஒன்றரை ஆண்டுகால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு […]

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, […]

சார்பதிவாளர் அலுவலகங்கள் வீடியோ காட்சிகளுடன் சேர்த்து குரல் பதிவுகளையும் கண்காணிக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது பதிவுத்துறையில் 585 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் சொத்து ஆவண பதிவு, திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களும் வழங்கப்பட்டு ஆவணப்பதிவுகள் நடக்கின்றன. விசேஷ நாட்களில் கூடுதலாகவே டோக்கன் வழங்கப்படுகின்றன.. […]

குஜராத்- வடக்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: குஜராத்- வடக்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் […]

தமிழகத்தில் கோயில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத வழிபாட்டு தலங்களின் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே தகவல் பரப்பப்படுகிறது. இது வதந்தி. தமிழகத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் ‘பொது வழிபாட்டு தலங்கள்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது […]

பிரதமர் ஜன் ஆரோக்ய திட்டத்தின் கீழ் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது ‌ ஆயுஷ்மான் பாரத் – பிரதமர் ஜன் ஆரோக்ய திட்டத்தின் (AB-PMJAY) கீழ் நாட்டில் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2022 இல், இந்திய அரசு இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை 10.74 கோடியிலிருந்து 12 கோடி குடும்பங்களாக உயர்த்திருத்தியது, இது இந்தியாவின் மக்கள்தொகையில் […]