தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டில் நடத்தப்படவிருக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, […]
பொது வருங்கால வைப்பு நிதி – 01.07.2025 முதல் 30.09.2025 வரையிலான காலத்திற்கு வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு சிறு சேமிப்பு மற்றும் வரி சேமிப்புத் திட்டமாகும். இது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து, கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தைப் பெற உதவுகிறது. PPF கணக்கைத் திறப்பதன் மூலம், தனிநபர்கள் தங்கள் […]
வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரத்தை மானிய விலையில் பெற விரும்பும் ஆதரவற்ற பெண்கள் ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் […]
கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் […]
2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, நாகை ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி; ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று கட்சியில் சேர சொல்லி […]
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் இன்று பாமக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்குமாறு தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான திமுக அரசு, இன்னும் இரு மைல்கல்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1200 நாள்களாகும் […]
விசாரணை என்ற பெயரில் மதுரை ஆதீனத்தை தமிழ்நாடு காவல்துறையை வைத்து திமுக தொந்தரவு செய்து வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக காவல்துறை இன்று மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து மத குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிறது இந்தத் திமுக அரசு. […]
2026 சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி படுதோல்வி அடைவார் என நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை அரங்கேற்றி நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டிரியல் ஆகிக் கொண்டிருக்கிறார். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றிவிடுங்கள் […]
அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் 28.07.2025 அன்று சென்னையில் நடைபெறுகிறது. அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் 28.07.2025 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் 28.07.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சலகங்களுடன் தொடர்புடைய ஓய்வூதியதாரர்கள் ஏதாவது புகார்கள் இருப்பின் அவற்றை தபால் […]
தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு, ஏற்கனவே விடுபட்ட பெண் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு இம்முறை கட்டாயம் ரூ.1000 கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் ஜூலை 15 தொடங்கி வருகின்ற நவம்பர் 14-ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது. இதுவரை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் இருப்பின் உடனடியாக […]