அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். ஓரணியில் தமிழ்நாடு என்கின்ற தலைப்பின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. […]
தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 4-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சில இடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் […]
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலை அந்த பொறுப்பில் இருந்து சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் புதிய பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலைக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அண்ணாமலைக்கு கட்சியில் தேசிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி […]
இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்; மக்களுக்கான திமுக அரசின் திட்டங்களும், சாதனைகளும் 2026-ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன். தமிழகத்துக்கான […]
புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம் வழங்குவது தொடர்பான விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; புதிய விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தம் செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. புதிய திருத்தங்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட 3 மாதங்களில் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும். […]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதலாக மூன்று விதிவிலக்குகளை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்ப பெண்களும், பிற ஓய்வூதத் திட்டங்களை ஓய்வூதியம் பெறுவோரும் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு உத்தரவு. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு […]
மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கல்வி நிலைய கட்டிடங்களை வரன்முறை படுத்த கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவு. தமிழகத்தில், 2011க்கு முன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த திட்டம், 2020 பிப்., 18ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு, ஆறு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் பெறப்பட்ட மனுக்கள், பல்வேறு நிலைகளில் பரிசீலனையில் உள்ளன. மீண்டும், ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. […]
சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 10.07.2025 முதல் 14.07.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 10.07.2025 முதல் 14.07.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, […]
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தும் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு […]
ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிந்து பெண் சிசுவை கலைக்க முயன்றதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் திருத்த மசோதாவை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய கொண்டு வந்தது. 20 வார காலம் உள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை மற்றும் 20 முதல் 24 வாரம் வரையுள்ள கருவைக் கலைப்பதற்கு […]

