முதல்வரின் காலை உணவு திட்டத்தில் திங்கள்தோறும் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார் வழங்கப்படும் என்ற சட்டமன்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நல துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு சமூகநல துறை ஆணையர் ஆர்.லில்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் திங்கள்கிழமை வழங்கப்படும் உணவு வகைகளில், காய்கறி […]

கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு முதல் நாளான இன்றே பாட புத்தகம் வழங்கப்பட உள்ளன. கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி […]

மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவிப்பு. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த வகையில், திமுக சார்பில் மாநிலங்களவை […]

தமிழகத்தில் பள்ளிகள் திறந்தவுடன், முதல் ஐந்து நாட்களுக்கு பாடப் புத்தகங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் ஆண்டு விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2 ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுவதை மனதார வரவேற்கிறேன். சீருடை, புத்தகப்பை, லஞ்ச் பாக்ஸ் உணவு, வீட்டுப்பாடம், […]

தருமபுரி மாவட்டத்தில் இன்று பட்டா மாறுதல் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படும் போது வருவாய் துறை மூலமாக, பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ் நிலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்யலாம். https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற […]

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சலுகை அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கி, காப்பீட்டுத் […]

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 7ம் தேதி தொடங்கிய நிலையில், 25 நாட்களில் விண்ணப்பிக்கும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஜூன் 6-ம் தேதி வரை www.tneaonline.org-ல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் […]

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த காலங்களில் தமிழ்நாடு மாணவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்த நிலையை மாற்றி, தற்போது அனைத்து தடைகளையும் உடைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தேர்வு பெறுகிறார்கள். தரவரிசை பட்டியலில் […]

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி வரும் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26ஆம் தேதி 09.06.2025 திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் […]

தூய்மை தமிழ்நாடு நிறுவனம் அனைத்து கழிவு பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்கள் மற்றும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களை பட்டியலிட்டு அங்கீகரிப்பதற்காக தகுதி உடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் தினம்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் […]