குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்க உள்ளார். குஜராத் மாநில தலைநகரில் இன்று நடைபெறும் முதல்வர் பூபேந்திர படேலின் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து குறைந்தது 20 முதல்வர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காந்திநகரின் புதிய செயலக கட்டிடத்தில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் […]
தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]
பான் கார்டை ஆதாருடன் 2023 ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையும் தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய வருமான வரி போர்டல் ( https://www.incometax.gov.in/iec/foportal/ ) மூலம் தனிநபர்கள் அதை ஆன்லைன் வாயிலாக செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் 2023 ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக பான் கார்டை ஆதார் உடன் இணைக்காவிட்டால் செயலிழக்க நேரிடும். SMS […]
சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சில்லறை சிகரெட் விற்பனையானது புகையிலை கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை பாதிக்கிறது என்று குழு கருதுகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் புகைபிடிக்கும் பகுதிகளை அகற்றவும் குழு பரிந்துரைத்துள்ளது. WHO வழிகாட்டுதல்களின்படி, இந்திய அரசு புகையிலை பொருட்களுக்கு 75% […]
கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், கரும்பு விவசாயத்தை மேம்படுத்தக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2020-21 அரவைப்பருவத்தில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையோடு, […]
விபத்துக்களில் காயடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.12,500 லிருந்து ரூ.50,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் காப்பீடு செய்து கொள்வதற்கான வழிமுறைகள் உள்ள நிலையில், ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து, திட்ட நிறைவு சான்றிதழ் வழங்கும்வரை ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனை சரிகட்ட காப்பீடுகள் அவசியமாகிறது. பணிகள், தாவரங்கள், எந்திரங்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் உபகரணங்கள், ஆவணக்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் இயலாமைக்கான காப்பீடு. நபர்களின் காயம் மற்றும் சொத்துக்கள் சேதத்திற்கான காப்பீடு. இதற்கிடையே, […]
பிரதமரின் ஸ்வநிதி திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வீதியோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வநிதி) திட்டத்தை 2022 மார்ச் மாதத்திற்கு அப்பாலும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, 2024 டிசம்பர் மாதம் வரை கடன் வழங்கலாம். முதலாவது கடன் ரூ.10,000 இரண்டாவது கடன் ரூ.20,000 பெற்ற நிலையில் கூடுதலாக மூன்றாவது கடன் ரூ.50,000 வரை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் அனைத்து […]
கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு வரும் 12 முதல் 22ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, அரசு உதவி மருத்துவர் நிலைக்குக் குறையாத மருத்துவரிடம் உடல் தகுதிச் சான்றிதழைப் பெற்று சம்மந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும் போது சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமை […]
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பணப்பரிமாற்றங்களை எளிமையாக்கி உள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் ஒரு நாளைக்கு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது.NPCI விதிமுறைகளின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்தை அனுப்ப UPI ஐப் பயன்படுத்தலாம். கனரா வங்கி போன்ற வங்கிகள் ரூ.25,000 மட்டுமே அனுமதிக்கின்றன, அதேசமயம் எஸ்பிஐ போன்ற பெரிய வங்கிகள் தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பை […]
தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையைக் கடந்து, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வடதமிழ்நாடு பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி […]