உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். முதல் […]

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மனோஜ் பாஜ்பாயின் தாயார் கீதா தேவி, நேற்று காலை 8:30 மணியளவில் காலமானார். அவர் கடந்த 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல், டெல்லி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்” இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். நடிகர் மனோஜ் பாஜ்பாயின் தந்தை ஆர்.கே.பாஜ்பாய் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் […]

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை […]

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொது மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதைத் […]

மாண்டஸ் புயல் இன்று இரவு கரையைக் கடக்கவுள்ள நிலையில் 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் இரவு கரையைக் கடக்கவுள்ளது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும் நடக்கவிருந்த சில தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதேபோல், புதுச்சேரி அரசும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உள்ளது.. இன்று பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், […]

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Senior Defence Banking Advisor, Defence Banking Advisor 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத […]

2025-ம் ஆண்டு வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும் விரைவு சக்தி சரக்கு முனைய கொள்கையின் கீழ் மூன்றாண்டுகளில், அதாவது 2024-25 வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 22 முனையங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கையின் கீழ் சரக்கு முனையங்களை அமைக்க 125 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 79 விண்ணப்பங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கு சொந்தம் இல்லாத […]

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்க உள்ளது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் போன்ற முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். பாஜக மீண்டும் குஜராத்தில் ஏழாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறது, மேலும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிரான போக்கைக் குறைக்கும் […]

2023 ஜனவரி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படவுள்ளது. செறிவூட்டல் அரிசி, ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து மாநிலங்களின் உணவுத் துறை செயலாளர்களுடன் சமிபத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் ஆலோசனை நடத்தினார். அதேபோல 2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறிவூட்டப்பட்ட […]

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று மாலை புயலாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக 8, 9, 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் […]