பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கலைஞருமான புலக் கோகோய், குவஹாத்தியில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு 84 வயது. அஸ்ஸாம் முதல்வர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார், “கலாச்சார உலகின் முக்கிய நபரான புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் புகழ்பெற்ற ஓவியரும் கார்ட்டூனிஸ்டுமான புலக் கோகோய் காலமானார் என்ற செய்தியால் நான் வருத்தமடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார். […]
தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலர் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். ஆரம்ப அறிக்கையின்படி, நடுக்கம் கிட்டத்தட்ட 5 வினாடிகள் நீடித்தது. நொய்டா மற்றும் குருகிராம் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது மற்றும் […]
திரைப்பட விளம்பரங்களில் கட்டாயம் சான்றிதழ் வகையை குறிப்பிட வேண்டும் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்ட செய்தி குறிப்பில்: தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு மத்திய சான்றளிப்பு வாரியம் (சிபிஎஃப்சி) வழங்கும் தணிக்கை சான்றிதழின் வகையை விளம்பரங்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட […]
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ‘வரைவு தொலைத்தொடர்பு சேவைகள் இணைப்பு ஒழுங்குமுறை விதிகள் 2022 குறித்து துறைசார்ந்தவர்களிடமிருந்து கருத்துகள், எதிர் கருத்துகளுக்கான கால அளவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. துறைச்சார்ந்தவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான கருத்துகளைப் பெறுவதற்கான கடைசித் தேதி அக்டோபர் 7, 2022 என்றும், எதிர் கருத்துகள் ஏதேனும் இருந்தால், அக்டோபர் 21, 2022 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. துறைச்சார்ந்தவர்களில் சிலர் வேண்டுகோள் விடுத்ததின் பேரில், எழுத்துப்பூர்வ கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 4 […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 833 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 953 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் […]
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள ஓதுவார், பரிசாரகர், காவலர், இரவு காவலர், திருவலகு, கால்நடை பராமரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 15 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் […]
மத்திய அரசின் தென் மண்டல பணியாளர் தேர்வாணையம் சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலை பணிக்கு தேர்வு நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 35,557 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும், தெலங்கானாவில் ஐதராபாத், வாரங்கல் ஆகிய இடங்களிலும் என 13 மையங்கள் / நகரங்களில் 17 […]
குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பின்னணியில் மிக அதிகமான பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் அதிக அளவிலான பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே குஜராத்தில் ரூ. 71.88 கோடி மதிப்பிலான பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது […]
தமிழகத்தில் வரும் 15-ம் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அடுத்த இரு தினங்களில் தமிழக கேரள பகுதிகளை கடந்து செல்லக்கூடும். இதன் காரணமாக இன்று […]
ஆன்லைன் மூலம் இபிஎஃப் இருப்பு தொகை சரி பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.. EPFO அதன் சேவைகளை, அமைப்புகளை பல வழிகளில் செயல்படுத்தவும் மாற்றியமைக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறது, அந்த வகையில் இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இபிஎஃப் அல்லது PF பயனாளிகள் யுனிவர்சல் கணக்கு எண் (UNA) இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் மற்றும் ஈபிஎஃப்ஓ தொகையை சரிபார்க்க முடியும். இதற்காக இபிஎஃப்ஓ சந்தாதாரர் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நாம் சரிபார்த்துக் […]