சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Officer பணிகளுக்கு என 110 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.63,840 […]
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறும். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில்; .தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.09.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளைஸபின்பற்றி இக்கூட்டத்தில் […]
இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் PVC பூட்ஸ் பற்றிய திருத்தியமைக்கப்பட்ட இந்திய தரநிலைகள்” குறித்த விவாதம் நடத்த பெற்றது. சிமெண்ட், உணவு பதன தொழில்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்காக பிவிசி பூட்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய பூட்ஸ்களில் தடிமன், ஏற்ற இறக்கம் போன்ற பல தேவைகளுக்கான மதிப்புகள் மாற்றியமைக்கப்பட்டு, செயல்திறன் மற்றும் குளிர் நெகிழ்வு எதிர்ப்பிற்கான கூடுதல் தேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மத்திய காலணி பயிற்சி நிறுவனம் […]
நாட்டின் அடுத்த முப்படைத் தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை அடுத்த பாதுகாப்புப் படைத் தளபதியாக நியமித்தது. லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான், இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகால வாழ்க்கையில், லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான் பணியாளர்கள் மற்றும் கருவி நியமனங்கள், […]
வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி […]
8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தமிழகம் முழுவதும் உள்ள 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை […]
அதிமுகவிற்கு புதிய மாவட்ட கழக செயலாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக எம்.ஆர்.ஆறுமுகம் என்கிற கேபிள் ஆறுமுகம், திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் (அம்பத்தூர், ஆவடி சட்டமன்றத் தொகுதிகள்) … செஞ்சி சேவல் வி.ஏழுமலை, விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர், பி.துரைபாண்டியன், கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், (சிதம்பரம். புலாகிரி, […]
ஆன்லைன் மூலம் உங்களுடைய ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். ஆதார் அட்டை என்பது எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, போன்ற பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். எனவே அனைத்து விவரங்களும் புதுப்பிக்கப்பட்டு அட்டையில் சரியாக இருப்பது முக்கியம். ஆதார் அட்டையை UIDAI இணையதளத்திற்குச் சென்று அல்லது பதிவு மையம் அல்லது ஆதார் […]
தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு அக்டோபர் 15-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 3,615 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 22 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,255 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]