கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், “ஜல்தூத் செயலி”யை உருவாக்கியுள்ளது. இது கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் பயன்படுத்தப்படும். இதனை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், புதுதில்லியில் இன்று நடைபெறும் விழாவில், “ஜல்தூத் செயலி”யை அறிமுகம் செய்து வைக்கவுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர் மட்டத்தை ஆண்டுக்கு இருமுறை (பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய) காலங்களில் அளவிடுவதற்கான வேலைவாய்ப்புக்கு ஜல்தூத் செயலி உதவும். […]

ஆளுநர் ஆர்.என்‌. ரவி போட்டி அரசாங்கம் நடத்த விரும்பினால் அதன் தன்மையை மக்கள் உணர வைப்பார்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்: தமிழ்நாட்டிற்கு ஆளுநராக டில்லி ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள ஆர்.என்.ரவி தான் பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை,தான் பதவி ஏற்கும்போது எடுத்த இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவே செயல்பட்டு வருகிறார் என்பது வெளிப்படையாகவே அனைவருக்கும் புரிகிறது. இந்திய […]

தமிழகத்தில் இன்று 23 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், […]

பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்புக்கான உந்துதலுக்கு ஏற்ப, இந்தியா பல ஆண்டுகளாக NavIC (Navigation with Indian Constellation) எனப்படும் அதன் பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பின் பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) உட்பட வெளிநாட்டு அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்திய அரசாங்கம் விரும்புகிறது. NavIC போன்ற மிகவும் துல்லியமான கருவியை உள்நாட்டிலே தயாரிக்க இந்தியா விரும்புகிறது மற்றும் அதன் பயன்பாடு […]

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாக தமிழகத்தில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது தான்… அரசு எப்பொழுது நிறைவேற்றும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், தற்பொழுது அதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது […]

அறநிலையத்துறை அமைச்சரின் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. அவரின் உடன் பிறந்த அண்ணன் அண்ணன் பி.கே.தேவராஜ். இவர் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அமைச்சர் சேகபாபுவின் அண்ணன் தேவராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக […]

சேலம்‌ மாவட்டத்தில்‌, ஒருங்கிணைந்த புள்ளியியல்‌ சார்நிலைப்‌ பணிகளுக்கான தேர்வுக்குத்‌ தயாராகும்‌ தேர்வர்கள்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக நடத்தப்படும்‌ பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு பயன்பெறலாம்‌. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ (TNPSC) ஒருங்கிணைந்த புள்ளியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய உதவி புள்ளியியல்‌ ஆய்வாளர்‌, கணக்கிடுபவர்‌ மற்றும்‌ புள்ளியியல்‌ தொகுப்பாளர்‌ ஆகிய பணியிடங்களுக்கான […]

‘நாகமாணிக்யம்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? ஒரு ராஜநாகத்தின் தலைக்குள் உருவான “விலைமதிப்பற்ற கல்” நீண்ட காலமாக மோசடிகளுக்கு மிகவும் பிடித்தது. ரத்தினத்தை சுமந்து செல்லும் நாகப்பாம்பு, பௌர்ணமி மற்றும் கருநிலா இரவுகளில் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு முன் அதை உமிழும். நாகமாணிக்யம் வேட்டைக்காரன் கல்லை மாட்டுச் சாணக் குவியலுக்கு அடியில் மறைத்து வைக்கும் வாய்ப்பைப் பெறுகிறான். பாம்பு பிரார்த்தனையை முடித்து, கல்லை மீண்டும் விழுங்கப் பார்க்கிறது, அதைக் கண்டுபிடிக்க […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,129 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,688 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

டெல்லியில் 12 வயது சிறுவனை நான்கு பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்து, “டெல்லியில் சிறுவர்கள் கூட பாதுகாப்பாக இல்லை” என்று கூறியுள்ளார். பெண்கள் ஆணையம் இந்த சம்பவத்தை அறிந்து டெல்லி போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என்று ஸ்வாதி பாலிவால் கூறினார். டெல்லியில் பெண்கள் ஒருபுறம் இருக்க, ஆண் குழந்தைகளுக்கு […]