முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 29.09.2022 அன்று 10.00 மணிக்கு நடைபெற […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,858 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,735 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Trainee Engineer மற்றும் Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E.., B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. […]

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார் ‌ மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மும்பையில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நீண்ட காலத்திற்கு உதவும் வகையில், நமது நாட்டின் போக்குவரத்து […]

2022-23 நிதியாண்டிற்கான மொத்த நேரடி வரி வசூல் 30% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நேரடி வரி வசூல் தொடர்ந்து வலுவான வேகத்தில் வளர்ந்து வருவது, தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார நடவடிக்கைகளின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறியாகும், மேலும் அரசின் நிலையான கொள்கைகளின் விளைவாகவும், செயல்முறைகளை எளிமைப்படுத்துதல்,ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயனுள்ள தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலமும் வரி கசிவைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது. 17.09.2022 வரை முறையாக சரிபார்க்கப்பட்ட ஐடிஆர்களில் கிட்டத்தட்ட 93% நடைமுறைப்படுத்தப்பட்ட […]

தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21-ம் தேதி மேற்கு […]

பிரபல தொலைக்காட்சி நடிகை, நிஷி சிங் தனது 50 வயதில் காலமானார் பிரபல தொலைக்காட்சி நடிகை, நிஷி சிங் தனது 50 வயதில் காலமானார். உடல்நலக் குறைவால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பிறந்தநாள் முடிந்த இரண்டு நாட்களில் காலமானார். நடிகை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், நேற்று மாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். குபூல் ஹை நடிகர், அவரது கணவர் சஞ்சய் […]

நடிகை ஜெயக்குமாரிக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். 25 வயதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஜிதா, பானு என்ற இரண்டு […]

30 நாட்களுக்குத் தீர்வு காணப்படாத விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். இந்தியாவில் வாகன ஓட்டிகள் எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியில் வர்த்தக சான்றிதழ் முறையை சீர்படுத்தி, எளிதான புதிய விதிகளை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் படி பதிவு செய்யாத அல்லது தற்காலிகமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வர்த்தக சான்றிதழ் தேவைப்படும். அதுபோன்ற வாகனங்களை விற்பனையாளர், தயாரிப்பாளர் அல்லது மோட்டார் வாகனங்களின் இறக்குமதியாளர் அல்லது 126 விதியில் குறிப்பிடப்பட்டுள்ள சோதனை […]

பிரபல நடிகர் ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் 80களின்‌ இறுதியிலும்‌ 90 களின்‌ தொடக்கத்துலும்‌ ரஜினி, கமல்‌ என அனைவருக்கும் இணையாக ஸ்டாராக வலம்‌ வந்தவர்‌ ராமராஜன்‌. சைக்கிளில்‌ வந்து அவர்‌ வீட்டில்‌ படத்திற்கு கால்ஷீட்‌ வாங்கி படம்‌ தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள்‌ இங்கு ஏராளம். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின்‌ நடிகராக வலம்‌ வந்தார் ராமராஜன்‌. அவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் […]