இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு 40% சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக CNG, மற்றும் சமையல் எரிவாயு விலை உயர வாய்ப்புள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது, இயற்கை எரிவாயு மின்சாரம் தயாரிக்கவும், உரம் தயாரிக்கவும், சிஎன்ஜியாக மாற்றப்பட்டு ஆட்டோமொபைல்களுக்கு சக்தி அளிக்கவும் மற்றும் சமையல் நோக்கங்களுக்காக வீட்டு சமையலறைகளுக்கு குழாய் மூலம் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 3,947 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 18;பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,474 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது, தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது, 2022-ம் ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றுக்கு 2022 ஆகஸ்ட் 27 அன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. இதற்கான அறிவிப்பு அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி 2022 […]

படித்த வேலைவாய்ப்பற்ற நபர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை‌. இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட் டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு […]

தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 2-ம் தேதி மற்றும்‌ 3-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு […]

குரூப்-2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திலும், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திலும் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை தேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 11,78,163 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1,83,285 பேர் தேர்வினை எழுதவில்லை. சுமார் 9,94,878 பேர் தேர்வு எழுதினர். அதாவது 84.44% […]

விபத்துக்கள் நேரிடும் போது உயிரிழப்புகளைத் தடுக்க வாகனங்களில் காற்றுப் பலூன்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வாகனங்களில் ஓட்டுநருக்கு காற்றுப் பலூன் கட்டாயம் என 2017-ம் ஆண்டு வாகனத் தொழில் தரம் 145-ன்படி விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. ஓட்டுநருக்கு பக்கத்தில் உள்ள இருக்கையிலும் இந்த காற்றுப் பலூன் அவசியம் என கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது. ஏஐஎஸ் 145, காலத்திற்கேற்றபடி அவ்வப்போது […]

கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் முறையில் ரிசர்வ் வங்கி முக்கிய மாற்றங்களை அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. நாடு முழுவதும் மக்கள் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் பணப்பரிவினை மேற்கொள்ளும் பொழுது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடன் அட்டையைப் பயன்படுத்தி ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் விவரங்கள் வாடிக்கையாளரின் அனுமதியுடன் வியாபார தளங்களில் […]

சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை, இந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4 ஆம் தேதியும் ( செவ்வாய்க்கிழமை), சரஸ்வதி பூஜை அக்டோபர் 5- ம் தேதியும் நாடு முழுவதும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாட […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டிகள்‌ நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ 2021- 22ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கையில்‌ நாட்டிற்காகப்‌ பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்‌ நேரு, அண்ணல்‌ அம்பேத்கர்‌, தந்தை பெரியார்‌, பேரறிஞர்‌ அண்ணா, முத்தமிழ்‌ அறிஞர்‌ கலைஞர்‌ ஆகியோரின்‌ஸபிறந்த நாளன்று மாவட்ட அளவில்‌ கல்லூரி மற்றும்‌ பள்ளி மாணவர்களுக்கு […]