தமிழகத்தில் உள்ள 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், நவ. 15-க்குள் நியாய விலை கடைகளுக்கு கோதுமை 100% அனுப்பப்பட்டுவிடும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது நாளிதழில் வந்த செய்தியை வைத்து எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு […]
புதுக்கோட்டை, திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார். புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதில் ரூ.767 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,முடிவுற்ற பணிகளைத் […]
தமிழகத்தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 14, 15-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நிரப்பும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in -ல் எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைனில் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை […]
ரேஷன் கடைகளுக்கு கோதுமை சென்று சேர்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்க, இம்மாதம் 8,722 டன் கோதுமையை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் செய்த தாமதத்தால், 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில், […]
முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டது. இந்த நிலையில், 2026 தொடக்கத்தில் தமிழகம், […]
ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் நேஷனல் வங்கியின் டெல்லி சன்சாத் மார்க் கிளை சார்பில் தேசிய அளவிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதளுக்கான பிரச்சாரம் 4.0 – ன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான முகாமை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறைசெயலாளர் ஸ்ரீனிவாஸ் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் […]
ஆவண பதிவு தொடர்பாக கடந்த 2016 முதல் ஆகஸ்ட் 2025 வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000 க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை நடந்திருந்தால் வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்க பதிவுத்துறை ஐஜி உத்தரவு வீடு, மனை விற்பனை உள்ளிட்ட நிகழ்வுகளில் பணப் பரிமாற்றம் அதிகமாகவே உள்ளது. இதில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் அதிகளவில் நடக்க வாய்ப்பு உள்ளதால் அவற்றை தடுக்க வருமான வரித்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில், […]
தமிழகத்தில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், 4 தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்தவும் பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்: ‘தொலைதூர கிராமங்கள், மலைப் பகுதிகள், புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஏற்கெனவே உள்ள 4 தொடக்கப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்’ என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். இதையடுத்து,இதற்கான கட்டமைப்பு […]
வரும் 12-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் […]

