தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி உலக குருதி கொடையாளர் தினமாக […]

திருத்தணி சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஏ.டி.ஜி.பி ஜெயராமனைக் கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏ.டி.ஜி.பி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மனுவை இன்று அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டார். அவரை திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், தொடர்ந்து […]

சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தமிழக ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக ஆளுநர் மாளிகையின் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய இரு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு […]

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது. இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு […]

முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உமங் செயலி மூலம் யு.ஏ.என். எண் ஒதுக்கீடு உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் சேவைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும், பயனர்கள் பயன்படுத்த எளிதானதாகவும் மாற்றுவதற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள், அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பான, திறமையான சேவைகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். அண்மைக் காலங்களில் […]

இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டு திட்ட முகாம் தொடங்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, மக்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “பாதுகாப்பு 360” என்ற புதிய பொது காப்பீட்டு இயக்கம் 30.06.2025 வரை செயல்படுத்துகிறது. இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோள், எதிர்பாராத இழப்புகள், சேதங்களிலிருந்து மக்களுக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு […]

அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம் நிலவி வருகிறது. மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவரே மருத்துவம் அளித்த காட்சி காணொலியாக வலம் வருவது […]

மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் […]

துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவர்களுக்கு மீண்டும் ஒரு […]

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜீன் 2025 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 20-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க […]