கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும். ஓரிரு இடங்களில் 22-ம் […]

ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் விடுவித்தல் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்; அலுவலகங்கள் / பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற / பெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் /மாவட்டக் கல்வி அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் ஆகியோரின் பணிக்காலத்திற்கு அகத்தணிக்கை உடன் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓய்வு பெற்ற சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள்/தலைமை […]

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஐசிடி அகாடமி மூலம் திறன் பயிற்சி வழங்கப்பட்டது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் (ஐசிடி அகாடமி), மாணவர், ஆசிரியர் திறன் மேம்பாடு, தொழில் நிறுவனங்கள் – கல்லூரிகளின் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த 7,533 ஆசிரியர்களுக்கு […]

ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் குறிப்பிட்ட தொகையை வாடகைதாரரிடம் இருந்து முன்பணமாக பெறுகின்றனர். ஆனால் சட்டப்படி ஒரு மாத வாடகை தொகை தான் முன்பணமாக வசூலிக்கப்பட்ட வேண்டும். வீட்டின் வாடகை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் வீட்டின் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்தலாம். அப்படியில்லாமல் திடீரென்று வாடகையை உயர்த்தினால் நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய அனைத்து உரிமைகளும் உண்டு. மேலும் வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்துவதற்கு […]

தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌. இந்த திட்டத்தின் கீழ் ரூ.40,000 வரை மானியம் வழங்கப்படும். […]

இந்தியாவில் கிரிமினல்களை அதிகமாக சேர்க்கும் கட்சி பாஜக என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார் ‌ சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி; பழனியில் அமைச்சர் சேகர்பாபு முருகன் பக்தர் மாநாடை சிறப்பாக நடத்தி முடித்தார். தமிழகத்தில் ராமா ராமா என்று சொல்லிப் பார்த்தார்கள் அது எடுபடவில்லை. தமிழ் கடவுள் முருகன் பெயரை சொல்லியாவது மாற்று வேடத்தில் வரலாம் என உள்ளே வருகின்றனர் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் […]

கடத்தல் வழக்கில் புரட்சிப் பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ். இவருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜா என்பவரின் மகள் விஜயாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து […]

கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழகத்தில் இன்று சில இடங்களிலும், நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் […]

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மூன்று நாள் பயணமாக நேற்று புதுச்சேரி வந்துள்ளார். துணை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், முதலமைச்சர் என். ரங்கசாமி, சபாநாயகர் ஆர். செல்வம் மற்றும் அமைச்சர்கள் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். இன்று ஜிப்மர் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “தேசத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை” என்ற நிகழ்வில் பங்கேற்ற பிறகு, துணை ஜனாதிபதி இங்குள்ள மத்திய நிர்வாக ஜிப்மரில் மாணவர்களிடையே உரையாற்ற உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் […]

மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் மதுரை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கினர். இதில் 6 நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரி இந்து முன்னணி சார்பிலும், அறுபடை வீடுகள் அமைக்கக் கூடாது என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் […]