கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்டிஏ அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் […]

சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் […]

பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் அருகே வாழப்பாடி வடுகநத்தம்பட்டியைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளர் சத்யராஜின் தந்தை தர்மராஜ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு, பாமக எம்எல்ஏ அருள் மற்றும் ஆதரவாளர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் காரை வழிமறித்த அன்புமணி ஆதரவாளர்கள் கும்பல், அருள் எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது. […]

மத்திய அரசின் அஞ்சல் துறையின், அஞ்சலக ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்களுக்கு நேர்காணல் சென்னையில் உள்ள பொது அஞ்சலகத்தில் நவம்பர் 17-ம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அஞ்சலக முகவர்களாக சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய வயது, கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்கள் (அசல் மற்றும் சுய சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் […]

டெல்லியில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டின்போது மூன்று தலைசிறந்த புதிய கண்டுபிடிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு பரிசாக வழங்கி உள்ளார். இந்தியாவிற்கு சொந்தமான குவாண்டம் பாதுகாப்பு சிப் (QSIP), கணக்கீட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தும் இந்தியாவின் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் (25-qubit QPU) மற்றும் இந்தியாவின் முதல் உள்நாட்டு புற்றுநோய் செல் சிகிச்சை (CAR-T செல் சிகிச்சை) ஆகிய மூன்று […]

இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய புதிய பாடத்திட்ட வடிவமைப்புக்கான உயர்மட்ட மற்றும் வல்லுநர் குழுக்களை பள்ளிக் கல்வித் துறை நியமனம் செய்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்; மாநிலக் கல்விக் கொள்கை-2025 அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றியமைப்பட உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க பாட நிபுணர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட வடிவமைப்பு […]

பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று, நடத்துநர்களுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போது பயணச் சீட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் நடத்துநர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியான புகார்கள் வருகின்றது. எனவே, பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறை கொடுக்க வேண்டும் என […]

தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ; இலங்கையில் 1983-ம் ஆண்டு நடந்த போர் காரணமாகவும் பல்வேறு காலகட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கு அடைக்கலம் வந்தனர். உலகின் பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன. இந்தியாவில்தான் ஈழத்தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே ஆயுள் முழுதும் […]

அதிமுகவில் இருந்து என்னிடம் உறுதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்தார். இதனால் அதிருப்தியடைந்த பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை பறித்தார். இந்த நிலையில், தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக மதுரை சென்ற செங்கோட்டையன், தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த […]

அரசு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி விநியோகிக்கப்பட உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கொரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி […]