நள்ளிரவில் பிரச்சாரம் மேற்கொண்டதால் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் 2026 ஜனவரி 7ம் தேதி மதுரையில் 7வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போது விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ணசாமி மாநாட்டு பிரச்சாரம் […]
வருகின்ற டிசம்பர் மாதம் முதல், இன்னும் கூடுதலான மகளிருக்கும், யார், யாருக்கெல்லாம் விடுபட்டுள்ளதோ அவர்களுக்கும் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நேற்று நடந்த அரச நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைக்கு மட்டும் சுமார் 73 ஆயிரம் பேருக்கு, இந்த அரங்கத்தில் மட்டும் 22 ஆயிரம் பேருக்கு, சுமார் 300 கோடி ரூபாய் […]
2025 அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ரூ.11,588 கோடி பெறப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜி.எஸ்.டி.) ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. இது 2024 அக்டோபர் மாதத்தில் இருந்து 2025 அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 4.6 சதவீதம் அளவிற்கு அதிக வரி பெறப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு சரக்கு […]
நாடு தழுவிய “டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்” பிரச்சாரம் 4.0-ன் கீழ், டெல்லியில் பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த ஓய்வூதியதாரர்கள் முகாமை, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். தேசிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC) பிரச்சாரம் 4.0-ன் கீழ் டெல்லியில் பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த மெகா ஓய்வூதியதாரர்கள் முகாமை நேற்று மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் […]
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் நன்கொடை வசூலிக்க ஆசிரியர்கள், அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் தறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்டம், நிறுவனங்கள் சட்டம் பிரிவு 8-ன்கீழ் தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டதாகும். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பங்களிக்க விரும்பும் […]
பீகார் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத் தேர்தல்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், 2025 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறவிருப்பதை அடுத்து பீகார் முழுவதும் 824 பறக்கும் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 2025 நவம்பர் 03 அன்று, பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் […]
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் […]
தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மியான்மர் கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு […]
இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 31 மீனவர்கள் அக்டோபர் 31-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் […]
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டுள்ளது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, […]

