மதுரையில் நாளை திமுக பொதுக் குழுவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இன்று மாலை ரோடு ஷோ’ செல்கிறார். இதையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இன்று மாலை ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விமானம் மூலம் முதல்வர் […]
சேலம் மாவட்டத்தில் வருகின்ற 31.05.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட திட்டக்குழு (FBDP) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31.05.2025 அன்று பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, […]
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த […]
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்.1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வின் மூலம் குறைந்தபட்சம் ரூ.1,420ல் முதல் |அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப்பலன்கள் கிடைக்கும். நிலுவைத் தொகையை 2024 செப்டம்பர் 1 முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27 அன்று 12 மணி […]
சேலம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-ம் ஆண்டில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக வெல்டர், வர்ணம் பூசுபவர் (பொது), கம்பியாள் போன்ற பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பிலும், மின்பணியாள், பொருத்துநர், பொருத்துநர் […]
தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000 கல்வி உதவித்தொகையுடன் கூடிய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. 2025-26ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த […]
கோவை உள்ளிட்ட 7 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வங்காள வங்கதேச கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]
தமிழகம் முழுவதும் “எளிமை ஆளுமை” திட்டத்தினை மக்கள் மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நிர்வாக சீர்திருத்த முன்னெடுப்பின் மூலமாக ’எளிமை ஆளுமை’ திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், பொது கட்டிட உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம், மகளிர் இல்லங்கள் உரிமம், சொத்து […]
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை […]
தமிழக அரசின் 7-வது மாநில நிதி ஆணையம் ஓய்வுபெறற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தமிழக அரசு 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து ஆணையிட்டுள்ளது. இந்த ஆணையம், பல்வேறு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். […]