வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று அரபிக்கடலில் நிலவக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த […]

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக பாஜக கவுன்சிலர் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் […]

விவசாயிகளை சந்தித்து முழுஅளவில் பயிர்க்காப்பீடு செய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது இன்று வட தமிழகம் – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த […]

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சாலைகள் அமைத்ததாக கணக்கு காட்டிய ரூ.78 ஆயிரம் கோடி நிதி எங்கு சென்றது என முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக – கர்நாடகா எல்லைப் பகுதியான ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி ஆகிய […]

பி.எட். படிப்பில் சேர்ந்த மாணவர்கள் தகுதி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) ஒரு வருட பி.எட் (B.Ed) மற்றும் எம்.எட் (M.Ed) படிப்புகளை மீண்டும் கொண்டு வர உள்ளது, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்த படிப்புகளின் கால அளவை இரண்டு ஆண்டுகளாக மாற்றிய நிலையில் தற்போது ஓராண்டாக மாற்றப்பட உள்ளது. புதிய வரைவு விதிமுறைகளின் ஒரு […]

அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர்மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பருவ மழையின் விளைவாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் […]

சத் பண்டிகையை முன்னிட்டு அடுத்த 5 நாட்களில் 1,500 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் பண்டிகைக் காலத்தில் மக்களை இணைப்பதில், இந்திய ரயில்வே தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. சத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பயணம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு பயணியும் தங்கள் இலக்கை பாதுகாப்பாகவும் வசதியாகவும் அடைவதை உறுதி செய்ய ரயில்வே கூடுதல் முயற்சிகளை எடுத்து வருகிறது. வழக்கமான ரயில் சேவைகளைவிட கூடுதலாக, […]

ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் வழங்கினார். ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது குடும்பத்தினருடன் […]

தாவர எண்ணெய் பொருட்கள், உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை (ஒழுங்குமுறை) உத்தரவு, 2011-ஐ பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள உணவு மற்றும் பொது விநியோகத் துறை, தாவர எண்ணெய் பொருட்கள், உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை (ஒழுங்குமுறை) ஆணை, 2011-ல் (விஓபிபிஏ ஆணை) ஒரு […]

இன்று மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது இன்று வட தமிழகம் – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் […]