கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நீலகிரி தொகுதியில் பேசிய அவர்; நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார் உதயநிதி. அதிக கடன் வாங்குவதில், கமிஷன், ஊழலில், வாரிசு அரசியலில், ஸ்டிக்கர் […]

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.87 கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக சமூகத் தணிக்கையில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. […]

தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறையக்கூடும். இன்று, மத்திய வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். […]

தமிழ்நாடு அரசு எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நல பாதிப்பு காரணமாக, கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கொரோனா காலத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன் என்பது […]

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு தரமற்ற பள்ளிக் கட்டடங்களை தி.மு.க. அரசு கட்டியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் மாற்றுவது கல்வி என்பதன் அடிப்படையில், தரமான மற்றும் கட்டணமில்லாக் கல்வியை வழங்கியதோடு, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தினார் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இதன் காரணமாக, பள்ளிகளுக்கு வரும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை […]

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 2025 ஜூலை மாதத்திற்கான தற்காலிக சம்பள பட்டியல் தரவுகளை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 2025 ஜூலை மாதத்திற்கான தற்காலிக சம்பள பட்டியல் தரவுகளை வெளியிட்டுள்ளது. இதில் 21.04 லட்சம் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் வெளியிடப்படும் பகுப்பாய்வு தரவுகளை 2024 ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடும் போது நிகர சம்பள பட்டியல் உறுப்பினர்கள் இணைப்பு 5.55 சதவீதம் உயர்ந்துள்ளது. தொழிலாளர் வருங்கால […]

தொலைத்தொடர்பு சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறைகளை 2025 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தொலைத்தொடர்பு (ஒலிபரப்பு மற்றும் கேபிள்) சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறைகள் 2025 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு சேவையாளர்கள் அளித்த ஆலோசனை அடிப்படையில் தொலைத்தொடர்பு சேவைகள் விதிமுறைகள் 2017 வரைவு திருத்தம் […]

தேசிய கல்வி உதவித்தொகைக்கு செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 கல்வியாண்டில் தேசிய கல்வி உதவித் தொகைக்காக, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2025 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 2025 ஜூன் 2, முதல், விண்ணப்பிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், முதலில் ஒரு முறை பதிவை நிறைவு செய்து அதன் பிறகு கல்வி உதவித்தொகை […]

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப்; கடந்த ஏழு மாதங்களில் மட்டும், முடிவுறாத 7 போர்களை நிறுத்தியுள்ளேன். முடிவில்லாத போர் என அவர்கள் கூறினார்கள். சில நாடுகளில் 31 ஆண்டுகளாக நீடித்து வந்தது. சில நாடுகளில் 28 ஆண்டுகளாக நடைபெற்றது. இரக்கமற்ற […]

தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்; 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸுக்கு கூடுதல் சீட்கள் வேண்டும் என்று கட்சியினர் தங்களுடைய ஆசையை சொல்கிறார்கள். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தாது. கட்சியினர் கருத்துகளை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவிப்பேன். ஆனால், முடிவு எடுப்பது காங்கிரஸ் தலைமையும், பொறுப்பாளர்களும் தான். தவெக-வுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் […]