கூகுள் இந்தியாவில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. கூகுள் இப்போது இந்தியாவில் அதன் தேடல் தளத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்முறையை (AI) தொடங்கியுள்ளது. கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2025) சமூக ஊடக தளமான X இல் இதை அறிவித்தார். “ஆய்வகங்களில் கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் தேடலில் AI பயன்முறையை நாங்கள் இப்போது அறிமுகப்படுத்துகிறோம். இது […]
ஒவ்வொரு ஆண்டும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நுரையீரல் புற்றுநோயால் இறக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் புற்றுநோய் இறப்புகளுக்கு நுரையீரல் புற்றுநோய் ஒரு முக்கிய மற்றும் மிகவும் ஆபத்தான காரணமாகும். அதன் புள்ளிவிவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது புகைப்பிடிப்பவர்களின் நோய் மட்டுமல்ல, அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் பிற காரணிகளால் புகைபிடிக்காதவர்களும் இதற்கு பலியாகின்றனர். உலகளவில் நுரையீரல் புற்றுநோய்தான் மரணத்திற்கு முக்கிய காரணம். புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.8 […]
ஆகஸ்ட் 1 முதல் ஜப்பான், தென் கொரியா, பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகள் மீது 40% வரை வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ள டிரம்ப், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். மியான்மர் மற்றும் லாவோஸ் மீது அதிகபட்சமாக 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் பற்றிய தகவல்களை டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் […]
அமெரிக்காவின் டெக்சாஸைத் தாக்கிய திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் அதிக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதால், சேறு நிறைந்த ஆற்றங்கரைகளில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக […]
புறாக்களின் எச்சங்கள் மற்றும் இறகு கழிவுகளால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் காரணமாக, மும்பையில் உள்ள ‘கபூதர் கானாக்கள்’ (புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்கள்) உடனடியாக மூடுமாறு மகாராஷ்டிரா அரசு பிரஹன் மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 3ம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பொது இடங்களில் தொடர்ந்து புறாக்களுக்கு உணவளிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பல உறுப்பினர்கள் எச்சரித்தனர். இந்தப் பிரச்சினையை எழுப்பிய சிவசேனா தலைவரும் பரிந்துரைக்கப்பட்ட எம்.எல்.சி.யுமான மனிஷா கயாண்டே, இந்த […]
“சமீபத்திய சமூக ஊடகப் பதிவில், டாக்டர் மாலூஃப், ஜெர்மனியில் உள்ள ஒரு இஸ்லாமிய இமாம் சொர்க்கம் குறித்துப் பேசும் வீடியோவை பகிர்ந்தார். அந்த இமாம், இஸ்லாமிய இறுதிக்கால கோட்பாட்டில் சொர்க்கத்தின் தன்மையைப் பற்றிய தனது கருத்துகளை விளக்குகிறார்.” அவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. வீடியோவில் அந்த இமாம் பேசியதாவது, விசுவாசிகளுக்காக சொர்க்கத்தில் 72 கன்னிப்பெண்கள் காத்திருப்பார்கள் என்ற கருத்து விவாதத்தையும் சர்ச்சையையும் தூண்டியுள்ளது. இவ்வகை கருத்துகள், மதப்பண்பாடுகள், சமத்துவம், சமுதாய […]
ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் காபூல், அதிகரித்து வரும் நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இலாப நோக்கற்ற நிறுவனமான மெர்சி கார்ப்ஸின் புதிய அறிக்கையின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் தண்ணீர் இல்லாத முதல் நவீன நகரமாக ஆப்கானிஸ்தான் தலைநகரம் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது. காபூலில் தண்ணீர் பற்றாக்குறைக்கு என்ன காரணம்? அதிகப்படியான பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் காரணமாக நகரின் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து […]
இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்ற போது, நாட்டில் பல மன்னர்கள் இருந்தனர். அந்தத் தருணத்தில், அதிக தங்கம் வைத்திருந்த மன்னர் ஒருவர் இருந்தார். இவரே இந்தியாவின் மிகவும் பணக்கார மன்னர் என்று அரியப்படுகிறார். அவர்தான், ஹைதராபாத் நவாப் மிர்ஜா ஒஸ்மான் அலி கான். இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்று அழைக்கப்பட்ட ஹைதராபாத்தின் கடைசி நிசாமான மிர் உஸ்மான் அலிகான் சுதந்திர இந்தியாவின் […]
ஆகஸ்ட் 1 முதல் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளதாவது, வரிவிதிப்பு தொடர்பாக இந்த இரு நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதங்களின் நகல்களையும் பகிர்ந்து கொண்டார். மேலும், ஜப்பானும் தென்கொரியாவும் எதிர்வினையாக இறக்குமதி வரிகளை (import taxes) அதிகரிக்க முயன்றால், […]
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கூட்டுறவு வங்கி மூழ்கியுள்ளது. இதனால், அடகு வைக்கப்பட்ட நகைகள், பணம், ஆவணங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. கனமழை மட்டும் பெய்யவில்லை. மேகவெடிப்பு, நிலச்சரிவும் ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. […]

