குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதியன்று குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பால் 2002 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தை தொழில்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு தகுந்த ஆதரவை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு இயல்பான குழந்தைப்பருவத்தை உறுதி செய்வதே இந்த நாளின் […]
மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சி கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி சோனம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், ‘ஆபரேஷன் ஹனிமூன்’ பற்றிய விவரம் வெளிவந்துள்ளது. அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து கிடைத்த தாலி மற்றும் மோதிரத்தின் மூலம் முதல் துப்பு போலீசாருக்கு கிடைத்தது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் இரண்டு வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றவும், ஆலையை இடிக்க கோரியும் சமூக ஆர்வலர் பேராசிரியை பாத்திமா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் […]
திரிபுராவில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அமர்நாத் யாத்திரை பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் பாழடைந்த மற்றும் அழுக்குப் பெட்டிகளைக் கொண்ட ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பான விவகாரத்தில் 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து, விசாரணை நடத்தவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ம் தேதி வரை 38 நாட்கள் நடைபெற உள்ளது. […]
ஒரு காலத்தில் இதய நோய் என்பது ஆண்களின் பிரச்சனையாகக் கருதப்பட்டது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களிடையே மாரடைப்பு அதிகரித்து வருகிறது, இது அகால மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. 45-55 வயதிற்குப் பிறகு, மாதவிடாய் நிறுத்தத்துடன் சேர்ந்து, இந்த ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இந்தக் கட்டத்தில், ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது இருதய பாதிப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனத்தின் CTVS […]
ஐ.சி.சி., ‘டி-20’ பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா ‘நம்பர்-3’ இடத்துக்கு முன்னேறினார். சூர்யகுமார் யாதவ் 5வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா, 804 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் சர்மா […]
சமையல் எண்ணெய் ரகங்களின் இறக்குமதி வரியை 20ல் இருந்து 10 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து எண்ணெய் விலையை குறைக்க நிறுவனங்களுக்கு மத்திய உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. சமையல் கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு உயா்த்தியதைத் தொடா்ந்து, சமையல் எண்ணெய் ரகங்களின் சில்லறை விற்பனை விலை பலமடங்காக உயா்ந்தது. இதனால் நுகா்வோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். உணவுப் பணவீக்கமும் அதிகரித்தது. இந்தநிலையில், கடந்த […]
ஏசிகளுக்கான வெப்பநிலை தரப்படுத்தல் 20°C முதல் 28°C வரை அமைக்கப்படும் என்றும் இனி 20°C க்குக் கீழே குளிர்விக்கவோ அல்லது 28°C க்கு மேல் சூடாக்கவோ முடியாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் புதிய விதியை அறிவித்துள்ளார். கோடையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பலரும் தங்கள் வீடுகளில் ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகளை போல் தற்போது ஏசி பயன்பாடும் அதிகரித்தும் வருகிறது. இந்தநிலையில், […]
பெண் நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பான விஷியத்தில் நீதித்துறை சமரசம் செய்ய முடியாது என்று கூறி பெண் நீதிபதியை அவமதித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி டெல்லியில் நீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதியை வாய்மொழியாகத் தாக்கி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. […]
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான டெலிபோன் சுப்பிரமணி, உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் டெலிபோன் சுப்பிரமணி. இவர் ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வடிவேலுவின் எலி, யுனிவர்சிட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விவேக் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நுழைவதற்கு முன்பு, இவர் தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றியதால் […]

