நடிகர் சந்தானம் புலி வாலை பிடித்து விளையாடும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சந்தானம் நாயகனாக நடிக்கும் அவரது 15-வது படமான “கிக்” திரைப்படம் சென்னை, பாங்காங், லண்டன் என பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டில் உள்ள ஹோட்டலில் நடிகர் சந்தானம் நீச்சல் குளம் அருகே படுத்துக் கொண்டிருக்கும் புலியுடன் விளையாடும் வீடியோவை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். […]
இஞ்சியை நன்றாகக் காயவைத்த பின்னர், அதில் உள்ள நீர் வற்றிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. சுக்கு எளிதில் கெடாது. குழந்தைகளுக்கு வயிறு மந்தமாக இருந்தால் சிறிதளவு சுக்கை அரைத்து அவர்களுக்குக் கொடுக்கலாம். சுக்கு எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும். காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் அருந்த…’ என சித்த மருத்துவப் பாடலே […]
கேரள மாநிலம் கோட்டயத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து 5,000 வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டன. பறவைக் காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளுவன்சா என்பது ஒரு வைரஸ் தொற்று. இது முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது, அதோடு கூட மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட பறவையின் மலம், மூக்கு, வாய் அல்லது கண்களிலிருந்து சுரக்கும் திரவமானது கோழி அல்லது பறவைகளுடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கும் அவை பரவுகின்றன. ஆகவே இந்த பாதிக்கப்பட்ட கோழி மற்றும் முட்டைகளை […]
நடிகை மீனாவின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தற்போதுதான் துக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். தற்போது படப்பிடிப்பு ஒன்றில் அவர் மேக்கப் போட்டுக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்த நிலையில் கணவர் […]
அமெரிக்காவைப் பொறுத்தவரைக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தான் முக்கியம். அங்குக் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை விடுப்பு இருக்கும். இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் தங்கள் வீடுகளை நோக்கிப் படையெடுப்பார்கள். அமெரிக்காவில் இந்த தலைமுறையில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்புயல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இப்போது அங்கு கடும் குளிர் நிலவும் நிலையில், பல பகுதிகளில் வெப்பம் -40 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியுள்ளது. கடுமையான பனிப்பொழிவால் பல பகுதிகள், மின்சாரம் இல்லாமல் […]
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களில் அதை பிரதிபலித்து வருகிறார். இந்நிலையில், உலகம் முழுதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் கோபால்பூர் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) முகத்தை மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ளார். சுமார் 1500 கிலோ தக்காளியை பயன்படுத்தி 27 […]
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்தனர் இந்தச் சூழலில், அந்நாட்டில் தெற்கு பகுதியில் வீசி வரும் கடுமையான பனிப்புயலால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், திடீரென உருவான பாம் சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று முன்தினம் 15 லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவர்கள் […]
வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், வங்கி கிளைக்குச் சென்றுதான் பணப்பறிமாற்றம் செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. அவ்வாறு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவைகளை, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி வழங்கி வருகிறது. இந்த ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த, பயனர் ஐடி எனப்படும் (user name) மற்றும் கடவுச்சொல் (password) என்பது மிக முக்கியமாகும். ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் எஸ்.பி.ஐ வங்கியின் நெட் பேங்கிங் (Net […]
ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ என்றும் ‘சப் போடில்லா’ என்றும் கூறுவர். வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்குத் தனிச் சிறப்பு உண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது. சப்போட்டாவில் உள்ள சத்துகள் மற்றும் பயன்கள் வைட்டமின் சி மற்றும் ஏ, நார்சத்து, புரோட்டின் , இரும்புசத்து, கால்சியம், […]
கொச்சியில் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தமிழக வீரரை கூட தேர்வு செய்யாமல் இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டிஎன்பிஎல் தொடரிலிருந்து ஏகப்பட்ட வீரர்கள் விளையாட வருகின்றனர். ஆனால் இவர்களில் யாராவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெருமையாக இருக்கும். ஆனால் கொச்சியில் நடந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]