ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் ஆகியவைகளுடன் ஒரு கிராமம் இருப்பது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கூப்பர் பேடி கிராமம் அமைந்துள்ளது. முன்னதாக, 1915 ஆம் ஆண்டில் இந்த பகுதியில் மாணிக்கக்கல் எடுப்பதற்காக பல்வேறு சுரங்கங்கள் தோண்டப்பட்டன. இதையடுத்து, தாதுக்கள் இல்லாத சுரங்கங்களை, அதில் வேலை செய்யும் மக்கள் வசிக்க […]

ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓட்டலில் தங்கவைத்து இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புரோக்கரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (எ) கார்த்திகேயன். சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கார் டிரைவராக பணியாற்றி வரும் இவன், ஆன்லைன் மூலம் தான் பிரபல ஐடி நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் மேலாளராக இருப்பதாகவும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற அடிப்படை […]

ஹங்கேரி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்கும் வகையில் பிரத்யேக ஆடையை வடிவமைத்துள்ளார். பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அன்றாட வாழ்வின் செயல்கள் பாதிக்கப்படும். ஏனென்றால், மாதவிடாய் நாட்களில் உடலில் சூடு அதிகரிக்கும். இதனால் கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் வலி அதிகமாக இருக்கும். இந்த உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில பெண்கள் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், சில நேரங்களில் மருந்து மாத்திரைகளால் பல்வேறு உடல் […]

வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை, உடல் சூடு, மூலம் உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய கசகசாவில் உள்ள மருத்துவ குணங்கள் பெரிதும் உதவுகிறது . மேலும், இதில் உள்ள பல்வேறு நன்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. அசைவ உணவுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் கசகசாவில் பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளது. இது இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; […]

அமெரிக்காவில், கண் சொட்டு மருந்தால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து சென்னையை சேர்ந்த கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடைவிதித்துள்ளது. சென்னையில் குளோபல் பார்மா ஹெல்த்கேர் என்ற தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் EzriCare என்ற செயற்கை முறையில் கண்ணீரை வரவழைக்கும் கண் சொட்டு மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இங்கு தயாரிக்கப்படும் சொட்டுமருந்துகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் […]

கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களை குடும்ப வன்முறை சட்டம் பாதுகாக்காது என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக கணவர் அளித்த புகாரை ரத்து செய்யக் கோரி, பெண்ணின் மனுவை விசாரித்த நீதிபதி, திருமணமான பெண்களைக் கொடுமையிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் முதன்மையான பாதுகாப்பு, ஒரு குடும்பத்தின் ஆண் உறுப்பினருக்கு, குறிப்பாக கணவனுக்குக் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார். […]

டைட்டானிக் கப்பலில் இறுதியாக லியானார்டோ டிகாப்ரியோவின் ஜாக் உயிர் பிழக்கை ஒரு வழி இருந்ததாக தனது அறிவியல் ஆய்வு மூலம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதிலளித்துள்ளார். 1912ம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ம் தேதிக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் ‘டைட்டானிக்’ என்ற மிகப்பெரிய கப்பல் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில், 1500 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் கடந்த பிறகு இந்த […]

தமிழகத்தில் 423 கி.மீ. நீள கடற்பகுதி இயற்கை சீற்றங்களாலும், மனித ஆக்கிரமிப்புகளாலும் தன் வடிவத்தை இழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இயற்கை பேரிடர்களால் நாட்டின் கடற்கரை பகுதிகள் அழிந்து வருகின்றன. இந்தநிலையில், சென்னையில் உள்ள தேசியகடற்பகுதி ஆராய்ச்சி மையம் மத்திய புவி அறிவியல் அமைச்சகம், செயற்கைக் கோள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் கடற்கரை பகுதிகளை கண்காணித்து வருகிறது. இந்தியாவின் 6,907 கி.மீ. நீளமுள்ள ஒட்டுமொத்த கடற்கரை பகுதியிலும் கடந்த 1990 […]

உத்தரப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக சுற்றித்திரியும் வீடியோ சமூக வலைதலங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்களில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நிர்வாணமாக, ஒருவரின் வீட்டு கதவைத் தட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்ததில், அந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும் என்றும், […]

ராணிப்பேட்டையில் மதுபோதையில் தகராறு செய்த கணவனை அறிவாள்மனையால் மனைவி வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ஏழுமலை. இவரது மனைவி கலைச்செல்வி. கட்டிட தொழிலாளியான ஏழுமலை, நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கலைச்செல்வி மாந்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில், நடத்தையில் சந்தேகப்பட்டு கலைச்செல்வியிடம் தினந்தோறும் கணவர் […]