முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் இவரது உண்மையான பெயர் ஜோசப் ரேட்சிங்கர். இவர் முன்னாள் போப் ஜான் பால் மறைவுக்குப்பின் இவர் கடந்த 2005-ம் ஆண்டு போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவரது 8 ஆண்டு பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார். இந்த நிலையில் 600 ஆண்டு கால வரலாற்றில் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்த முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட், கடந்த டிசம்பர் 31ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், […]

கிறிஸ்டியானோ ரொனால்டோ :  கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் அல் நாஸருடன் ஜூன் 2025 வரை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். போர்ச்சுகல் நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவை  சவுதி அரேபிய தரப்புடன் இணைக்கும் மிகப்பெரிய ஒப்பந்தம் சுமார் $211 மில்லியன் டாலர்கள் ஆகும். கிலியன் எம்பாப்பே : ஜனவரி 2022 இல் ரியல் மாட்ரிட்டை வென்ற பிறகு, பிரெஞ்சு ஜாம்பவான்களுடன் Mbappe $128 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் ரொனால்டோ சவுதி […]

இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற்றாலும், மறுமணம் செய்யும் வரை அவர்களுக்கு முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜாஹிதா கட்டூன் என்ற இஸ்லாமிய பெண் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து செய்யப்பட்ட கணவனிடமிருந்து ‘இத்தா’ காலம் முடியும் வரை மட்டுமல்ல, அவருடைய வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு […]

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவை அவர் வகித்து வந்த நிதி நிறுவன துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அந்நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.   அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் வயதான பெண் இருவரும் பயணித்தார். இரவில் விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்ட […]

ஏமன் நாட்டில் உள்ள மலை கிராமம் ஒன்றில் இதுவரை ஒரு சொட்டு மழை கூட பெய்தது இல்லையாம். இந்த கிராமம் பற்றி முழு தகவல்களை இந்த பதிவில் காணலாம்…! உலகில் பல பகுதிகளில் மழை அதிகமாக பெய்யும் குறிப்பாக நம் நாட்டில் உள்ள மேகாலயாவின் மாசின்ராம் என்ற கிராமம் வருடம் முழுவதும மழை பெய்யும் கிராமமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் மழையே பெய்யாத பகுதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது […]

பாலிவுட் முன்னணி நடிகர்களான அமிதாப்பச்சனின் பேரனும், ஷாருக்கானின் மகளும் காதலித்து வருவதாக வெளியாகிவுள்ள செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் அமிதாபச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்தியா நந்தா ஆகிய இருவரும் ஜோயா அக்தரின் அமெரிக்க காமிக் புத்தகமான தி ஆர்ச்ஸில் இணைந்து பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளனர். இந்த நிலையில் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகஸ்திய நந்தாவின் […]

உலக கத்தோலிக்கர்களின் தலைவராக திகழ்ந்த முன்னாள் போப் அரசர் 16 ஆம் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகள் வாடிகனில் நடைபெற்றது. 16-ம் பெனடிக்ட் இவரது இயற்பெயர் ஜோசப் ரட்சிங்கர். கடந்த 1977 முதல் 1982 வரை ஜெர்மனியின் முனிச் உயர் மறைமாவட்ட பேராயராக பதவியில் இருந்தார். கடந்த 2005ம் ஆண்டு முதல் 2013 வரை போப் ஆண்டவராக இருந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக போப் ஆண்டவர் […]

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் அருகே பயிற்சி விமானம் ஒன்று கோயில் கோபுரம் மற்றும் மரத்தின் மீது மோதியதில் விமானி உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. சுமார் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென, தாழ்வாக பறக்க ஆரம்பித்தது. சில நொடிகளில் குடியிருப்பு பகுதியில் இருந்த கோயில் […]

பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ள சம்பவம் அனைத்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவர் 50 வயதான சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி, குவெட்டா நகரின் அருகே வசிக்கும் இவர் மருத்துவ தொழில் செய்துவருகிறார். இவர் இதுவரை 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டு மேலும் அதிக குழந்தைகளை […]

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் […]