fbpx

மோசமான பேட்டிங் காரணமாக கே.எல்.ராகுல் சந்திக்கும் கடுமையான விமர்சனங்களை தானும் சந்தித்ததாக இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் உருக்கமாக பேசியுள்ளார்.

காயம் மற்றும் அறுவை சிகிச்சையால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளங்கிவரும் கே.எல்.ராகுல், கடந்த ஆண்டு பல்வேறு போட்டிகளில் விளையாடவில்லை. மேலும், மோசமான ஆட்டம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். …

சேலம் ஓமலூர் அருகே தகாத உறவால் தனது 2 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண்ணை போலீசார் புதுச்சேரியில் கண்டுபிடித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சவுண்டப்பன், நெசவுத் தொழில் செய்துவரும் இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. …

தொடர்ச்சியாக 60 டிகிரி செல்சியஸிற்கு மேலாக சூடான பானங்களை அருந்தினால் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதிக சூடாக டீ, காஃபியை தொடர்ந்து குடித்தால் உடல் நலனில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. சர்வதேச …

வைட்டமின் சி இருக்கக் கூடிய எலுமிச்சை, ஆரஞ்ச், சாத்துக்குடி ஜூஸை தினந்தோறும் குடித்துவந்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சிறுநீரக கற்கள் எதனால் வருகிறது என்றால் கால்சியம், ஆக்ஸலேட் ஆகிய இரு உப்புகளும் ஒன்று சேரும் போது நமக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. இதை எப்படி தடுப்பது, அந்த கற்களை எப்படி …

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வகையில் நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஆரோக்கியம் தரும் காய்கறிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெயிலின் தாக்கத்தால் உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் எல்லாம் உறிஞ்சப்பட்டு சோர்வு ஏற்படும். இந்த காலத்தில் தண்ணீர்ச்சத்து மட்டுமின்றி, உப்புச் சத்து குறைபாடும் …

நார்ச்சத்து உள்ள சப்போட்டாவை சாப்பிடுவதால், குடல் இயக்கங்கள், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகள் நீங்கிவிடும். மேலும், ரத்த அழுத்தம், இதய கோளாறு, சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கிறது

இயற்கையாகவே அதிக இனிப்பு சுவை கொண்ட பழ வகைகளில் சப்போட்டாவும் ஒன்று. பனிக்காலத்தில்தான் இந்த பழத்தை அதிகம் பார்க்க முடியும். எளிதில் செரிமானிக்கக் கூடிய …

பிரேசில் நாட்டில் 42 வயதுடைய பெண் ஒருவர் 7.3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பிறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தையின் சராசரி எடை 3.3கிலோ, பெண் குழந்தையின் சராசரி எடை 3.2 கிலோ ஆக இருக்கும். ஆனால் பிரேசில் நாட்டின் பார்ண்டின்ஸ் பகுதியில் உள்ள பார்ட்ரே கொலம்போ …

கணினியில் ஃபயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்தி எளிய முறையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு Translate செய்யும் முறை குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம்.

கணினியில் ஃபயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தினால், மொழிபெயர்ப்பு எக்ஸ்டென்ஷனை பதிவிறக்கம் செய்து, விரும்பும் இணையப் பக்கத்தை முழுமையாக தமிழில் வாசிக்க முடியும். அந்தவகையில், முதலில் ஃபயர்பாக்ஸ் அப்ளிகேஷனை கணினியில் திறந்ததும், அதன் வலது மூளையில் …

2050ம் ஆண்டில் உலகம் முழுவதும் 2,600க்கு அதிகமான மாநிலங்கள் மற்றும் மாகாணங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் என்றும் இதன் மூலம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் மனிதர்கள் ஏற்படுத்தும் மாசுக்களால் காலநிலை தொடர்ந்து இயல்பை இழந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காலநிலை மாற்றம் குறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த …

மேற்கு வங்காளத்தில் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளால் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மற்றும் டெங்குவுக்குப் பிறகு அடினோ வைரஸ், மக்களிடையே பெரும் கவலைகளை ஏற்படுத்திவருகிறது. தற்போதைய குளிர்காலத்தில், மேற்கு வங்காளத்தில் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளால் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே, அடினோ வைரஸால் …