செயற்கை நுண்ணறிவு (AI) பல பணிகளை எளிதாக்கியுள்ள நிலையில், அதன் ஆபத்தான அம்சங்கள் குறித்து பெரிய கூற்றுக்களும் எச்சரிக்கைகளும் அவ்வபோது மனிதர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. அந்தவகையில், முன்னாள் கூகுள் நிர்வாகி மோ கவ்டட், AI இன் எதிர்காலம் குறித்து கூறிய கணிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எதிர்வரும் 15 ஆண்டுகளில், AI மனிதர்களுக்கு நரகமாக இருக்கும் என்றும், அதன் மோசமான கட்டம் 2027 ஆம் ஆண்டு முதல் தொடங்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். […]

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டர் ஏழாவது நாளாக தொடர்கிறது. இதுவரை ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான் மற்றும் நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் அகல்-தேவ்சர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏழாவது நாளாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 6, 2025) இரவு முழுவதும் கடுமையான துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு நாள் முழுவதும் […]

வாரத்திற்கு மூன்று முறை வறுத்த உருளைக்கிழங்கு சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை 20% அதிகரிக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ இதழான தி பிஎம்ஜேயில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வறுத்த உருளைக்கிழங்கிற்கு பதிலாக, வேக வைத்து, சுட்டு அல்லது மசித்து சாப்பிடுவது, ஆபத்தை அதிகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த வகையான உருளைக்கிழங்கையும் முழுதானியங்களால் (whole grains) மாற்றினால், வகை 2 நீரிழிவு […]

இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் (ஆகஸ்ட் 7) அமல்படுத்தப்படவுள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள தாக்கம் குறித்து பெரும் கவலைகளை எழுப்பியது. இருப்பினும், தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. PHD வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (PHDCCI) நடத்திய ஆய்வின்படி, இந்த வரி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.19% […]

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள 25% வரிக்கு மேல் கூடுதலாக 25% வரியை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இறக்குமதி வரியை 50% ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்திய சந்தையில் நுழையும் அமெரிக்க பொருட்களின் விலைகளில் கூர்மையான அதிகரிப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகள்: COMTRADE தரவுத்தளத்தின்படி, […]

நம்மில் பலருக்கு ஒவ்வொரு வகையான படங்களை பிடிக்கும். ஒரு சிலருக்கு காதல்-காமெடி படங்கள் பிடிக்கும். ஒரு சிலருக்கு த்ரில்லர்-ஆக்ஷன் படங்கள் பிடிக்கும். ஸ்பெஷலான சிலருக்கு பேய்-த்ரில்லர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பேய் பட பிரியர்கள் பலர், மயிர்கூச்சரிய செய்ய வைக்கும் அளவிற்கு பயத்தை கொடுக்கும் படங்களை தனியாக பார்க்க வேண்டும் என்று விரும்புவர். ஒரு திரைப்படம் என்பது விருவிருப்பாகவும், ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். படங்கள் பார்க்க […]

கானாவில் (Ghana) ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து நேற்று (06) காலை 9.12 மணியளவில் அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு இராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. இதையடுத்து, புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. […]

The Hundred கிரிக்கெட் லீக் தொடரில் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற புதிய சாதனையை ரஷீத் கான் படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரஷீத் கான், ஐபிஎல், பிபிஎல், சிபிஎல், பிக்-பாஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர், டி20 கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி அரிய சாதனை […]

பிரேசிலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக பதட்டங்கள் நிலவிவரும் நிலையில், பிரேசில் அதிபர் லூலா டிரம்புடன் பேச மறுப்பு தெரிவித்துள்ளார். பிரேசில் இறக்குமதிகள் மீது அமெரிக்கா கூடுதலாக 40% வரி விதித்துள்ளது. இதன் மூலம் மொத்த வரி 50% ஆக உயர்ந்தது. இது பிரேசிலின் ஏற்றுமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை பிரேசில்-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா பேசியதாவது, […]

பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (BCAS) வெளியிட்டுள்ள பதிவில், செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை பயங்கரவாதிகள் அல்லது “சமூக விரோத சக்திகளிடமிருந்து” அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று மத்திய பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விமான நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்துமாறு […]