திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வான்நுண்ணறிவு பிரிவினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கக் கோரியிருந்தனர். சோதனையை தீவிரப்படுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சிங்கப்பூர் , துபாயில் …