புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வை 666 பேர் எழுதினர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குளத்துறை சேர்ந்த தர்மர் (20) என்ற நபர் பட்டன் கேமரா மற்றும் ப்ளூடூத் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் இந்த விவகாரம் குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. ஆகவே தர்மரை […]

நாட்டில் புதிதாக 403 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4972 ஆக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, நாட்டில் இதுவரையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,864 என அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்றுக்கு 5 பேர் பலியாகி இருக்கின்றனர். அவர்களில் […]

டெல்லியில் கடந்த 2020 ஆம் வருடம் தொடங்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி முடிவடைந்து திறப்பு விழாவிற்காக காத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் நடைபெற்றது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி இன்று காலை 12 மணிக்கு தொடங்கியது. ஆனாலும் அதற்கு முன்னதாகவே பாரம்பரிய சடங்குகள் இன்று காலையிலேயே தொடங்கிவிட்டது. இதற்காக புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரதமர் […]

இன்றைய தினம் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமானது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி மதியம் 12:00 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதத்தில், அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு […]

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து மக்களவையில் செங்கோலை நிறுவிய பிரதமர் நரேந்திரமோடி, இதுகுறித்து தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு இருப்பதால் நம்முடைய மனம் பெருமை மற்றும் நம்பிக்கையால் நிறைந்திருக்கிறது. கனவுகளை நினைவாக்கட்டும் இந்த புதிய கட்டிடம் நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்லட்டும் என்று பதிவிட்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் புதிய நாடாளுமன்ற […]

உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் ஒரு மாத காலமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக இவருக்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன. இந்தப் புகார்கள் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பூஷன் சிங் மீது வழக்கப்பதிவு செய்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு […]

இன்று காலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார். அதேபோல மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இடத்தில் தமிழகத்தின் செங்கோலும் நிறுவப்பட்டது. இத்தகைய நிலையில்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட்ட இன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய வலைதள பதிவில் பதிவு ஒன்றையும் […]

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி சென்ற வருடம் செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மூத்த நீதிபதியான டி. ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு டி ராஜா கடந்த 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக வருடம் தோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப்பணி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ எஃப் எஸ், குரூப் எ, குரூப்-b, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருக்கின்ற காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்று மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள் […]

கோடை காலம் என்பது மார்ச் மாதத்தில் தொடங்கி ஜூன் வரையில் காணப்படும். இந்த நான்கு மாத காலத்தில் மே மாதம் மற்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருக்கும் வழக்கமாக மே மாதம் 3 அல்லது 4ம் தேதிகளில் அக்னி நட்சத்திரம் தொடங்கி 27 நாட்கள் நீடிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டில் மே மாதம் நான்காம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த காலகட்டத்தில் […]