கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். ஐடிஐ தகுதி: டிப்ளமோ அப்ரண்டிஸ் காலியிட விவரங்கள்: டிகிரி முடித்தவர்களுக்கான பணியிடங்கள் சம்பளம் எவ்வளவு? ஐடிஐ அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு ரூ.7,700, டிப்ளமோ அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு ரூ. 8,000, பட்டதாரி அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு ரூ.9 ஆயிரம் வழங்கப்படுகிறது. தேர்வு முறை: மெரிட் லிஸ்ட் […]

அஜித் குமார் வழக்கில் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. இந்த […]

கென்யாவின் நைரோபி நகரம் உள்பட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள், இப்போது தீவிரமான வன்முறைகளில் முடிந்துள்ளன. ஜூலை 7 ஆம் தேதி அந்த நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வான “சப சபா” போராட்ட நினைவு நாளில் பெரும்பான்மையிலான இளைஞர்கள் சாலைகளில் குவிந்தனர். ஜனநாயக அரசியல் கோரிக்கைகளுடன் கூடிய இந்த மக்கள் எழுச்சியை கலைப்பதற்காக, கென்யா காவல் துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக் […]

பொருளாதார ரீதியாக பின்தங்கிய அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்காக மத்திய அரசால் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா (PM-SYM) திட்டம் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம், வயதான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்குவதாகும். இந்த திட்டத்தின் மூலம், குறைந்த வருமானம் உள்ளவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்திற்கு யார் தகுதியானவர்? இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், […]

இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர்வதால், அவர்களால் உற்சாகமாக இருக்க முடியாது. அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிய முடியாது. எந்த செயலை செய்தாலும் விரைவாக சோர்வடைவார்கள். இருப்பினும், சில நல்ல பழக்கவழக்கங்களுடன், தொப்பை கொழுப்பைக் குறைக்கலாம். நாம் தினமும் குடிக்கும் பழச்சாறுகள், சோடாக்கள், தேநீர், காபி போன்ற சில பானங்களில் சர்க்கரை அதிகமாக உள்ளது. இந்த சர்க்கரை உடலில் கொழுப்பாக மாறி வயிற்றை வளரச் செய்கிறது. எனவே நீங்கள் பழச்சாறுகளை குடிக்க […]

கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்தபோது, தண்டவாளத்தைக் கடந்து சென்றுவிடுகிறேன் என ஓட்டுநர் வற்புறுத்தி சென்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில் ஓட்டுநர் சங்கர் மறுத்துள்ளார். கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பள்ளி வேன் மீது ரயில் மோதிய […]

தஞ்சாவூர் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சுற்றுலா வந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் உதாரமங்கலம் அருகே தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில், நாற்றுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது சென்னையிலிருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த வாகனம்(கார்) எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த போலீசார் […]

பள்ளி வேன் மீது இரயில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா சாருமதி, தம்பி செழியன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் மோதி 50 மீட்டர் தூரம் வேன் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. […]

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 6 ஆம் வகுப்பு படிக்கும் நிவாஸ் மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி உயிரிழந்துள்ளனர். வேன் ஓட்டுனர் உட்பட பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் […]