பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்க வேண்டுமென வங்கிகள் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் […]

சென்னையில் இன்றைய (ஜூன் 12, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்திய மக்களின் சேமிப்பில் தங்கம் முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் தான், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஆட்டம் காட்டி வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் […]

ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில், 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. 2023 ஜனவரியில், அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்க ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு […]

தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு சந்தையில் இன்றைய தினம் காய்கறி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் பெய்து வந்த கோடை மழையின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளின் விளைச்சல் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த வாரங்களில் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டது. விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் காய்கறி வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஏனென்றால் இன்னும் விலை அதிகரிக்குமோ என்ற அச்சம் […]

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பக்தர் மீது கார் ஏறி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக கார் வாங்கிய நபர் பூஜைக்காக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தார். அந்த காரை முன்னே நகர்த்தியபோது கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோயில் வாசலில் தூங்கி கொண்டிருந்த நபர் மீது கார் ஏறி இறங்கியது. பக்தரின் தலையில் கார் ஏறியதில் தலை நசுங்கி […]

11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அறிக்கை தாக்கலாகுமா? என கேள்வி எழுந்திருக்கிறது நடப்பாண்டில் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை வெல்வது 18 வருட கனவு என்பதால், இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாட ஆர்சிபி அணி நிர்வாகம் […]

பீகாரின் கைமூர் பகுதியை சேர்ந்தவர் பவன்குமார்.. இவருக்கு நேற்று முன்தினம் ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தின்போது மணமகளின் நெற்றியில் குங்குமம் பூசும் சடங்கு நடந்தது.. குங்குமம் பூச கைகளை உயர்த்தியபோது திடீரென மாப்பிள்ளையின் கை நடுங்கத் தொடங்கியது.. கை வெடவெடவென நடுங்குவதை கண்டு மணப்பெண் பதறிப்போனார்.. உடனே மணமகனை மென்டல் என்று சொன்னதுடன், உடனே இந்த கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று மனமகள் கதறி அழுதார். […]

கோயில்களின் மாநகரம் எனப் புகழ்பெற்ற புனிதத் தலம் அன்னை காமாட்சி அம்மன். புனிதமான நாபி பீடமாக விளங்கும் இத்தலம், 51 சக்தி பீடங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல், மோட்சம் தரும் தலமாகவும் பரிகணிக்கப்படுகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், அன்னையின் கருவறையில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் உள்ளது. அதனைச் சற்றும் விலக்காமல், அம்மன் நேராக அதற்கு முன்பாகவே பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். இதன் மூலம், ‘அஞ்ஞானம் அகற்றி ஞானம் தரும் தெய்வம்’ […]

கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணைவிகளை அணைத்து தகாத செயலில் விஜய் ஈடுபட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் குழந்தைகள் நல குழுவிடம் புகாரளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தாண்டும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் […]

சேலத்தை சேர்ந்த பசுமை தாயகத்தின் மாநில இணைச் செயலாளர் சத்ரியசேகர் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கடந்தாண்டு நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். ஆனால், மேடையில் வைத்தே அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் பிரச்சனையில் ஆரம்ப புள்ளி. பின்னர், இதைத்தொடர்ந்து பாமகவில் அவ்வப்போது […]