வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அதில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், மூன்று மாநிலங்களின் சந்திப்பாக திகழும் முக்கிய பகுதி. இங்கிருந்து மைசூர் நோக்கி ஒரு தேசிய நெடுஞ்சாலையும், வயநாடு, மலப்புறம் நோக்கி மாநில நெடுஞ்சாலைகளும் செல்கின்றன. இதனால் கூடலூர் பகுதியில் இரவு பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு […]
மீன் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மீன் சாப்பிடும்போது செய்யக்கூடாத சில தவறுகள் உள்ளன. மீனுடன் சில உணவுகளை சாப்பிடுவது பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போம். பலர் மீன் சாப்பிடுவதை விரும்புகிறார்கள். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மீனில் மெலிந்த புரதம், வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை […]
சென்னை பரங்கிமலை காவல் நிலையம் வாசலில் இன்று சவுக்கு சங்கர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது என்னையும் அஜீத் மாதிரி அடிப்பீங்களா? போலீஸ் அராஜகம் மக்களுக்கும் தெரியட்டும் என கோஷமிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சவுக்கு மீடியா கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசால் எத்தனை கொடுமைகளை சந்தித்து கொண்டு இருக்கிறது என எல்லாருக்கும் தெரியும். என் வீட்டில் மலம் ஊற்றப்பட்டது. சாக்கடை ஊற்றப்பட்டது. என் மீது […]
திரைப்பட நடிகர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பிரபலங்கள் தற்போது வருமானம் இல்லாமல் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது தான் இதன் மறுபக்கம். பெரும்பாலம் துணை நடிகை, நடிகர்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவுண்டமணியும் மற்றும் செந்திலுடன் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் தான் நடிகை வாசுகி. காரைக்குடியை பூர்விகமாக கொண்ட […]
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களுக்கும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) பிரேக்கிங் முறை கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது. ஏபிஎஸ் என்பது, வாகன ஓட்டுநர் அவசர நிலையில் திடீரென பிரேக் அடிக்கும்போது, சக்கரங்கள் லாக் ஆகாமல் தடுக்கக்கூடிய ஒரு […]
South Korean actress Lee Seo-yi has died at the age of 43.
ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பிஎஃப் தொகையை யுபிஐ (UPI) வாயிலாக நேரடியாக பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாகியுள்ளது. அதனுடன், ரூ.5 லட்சம் வரை, தொகையின் பாதியை 72 மணி நேரத்துக்குள் தானாக அங்கீகரிக்கும் (Auto-approval) முறையும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக இனி வேலை செய்யும் நிறுவனத்தின் கையெழுத்தோ பிஎஃப்ஓ அலுவலகம் செல்ல வேண்டிய தேவை கிடையாது. இதற்கு ஆதார் எண், பேன் என்னும் வங்கி கணக்கும் உங்கள் யுஏ எண்ணுடன் […]
போலீசார் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் தம்பி நவீன் குமாருக்கு அரசுப்பணி நியமன ஆணையை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் என்ற இளைஞர் உயிரிழந்தார்.. காவல்துறை கொடூரமாக தாக்கியதே காரணம் என்பது பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 […]
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பாலம் மீது சென்று கொண்டிருந்த மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலின்படி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து ஒன்று பழுதடைந்து நின்ற நிலையில் பஸ்சை மீட்டுக்கொண்டு மீட்பு வாகனம் ஒன்று பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே கூத்தூர் மேம்பாலத்தில் வந்தபோது, அதே திசையில் வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி […]
பாலியல் நோக்கம் இல்லாமல் ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்வது பாலியல் துன்புறுத்தல் எனக் கருத முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 2015ஆம் ஆண்டு சிறுமியிடம் ஐ லவ் யூ என கூறிய 35 வயது நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை முதலில் நாக்பூர் நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 2017ல் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த நபரைக் குற்றவாளி […]

