2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி 2023 மே 19 அன்று முடிவு செய்தது. நோட்டு வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்தது. பணம் கொண்டு வருபவர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதன் மூலம் 98 சதவீதம் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது […]

1990களில் தென்னிந்தியாவில் பல வெடிகுண்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதி அபுபக்கர் சித்திக், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது அலியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) பல மாதங்களாக மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இருவரும் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றக் காவலில் […]

இந்திய கிரிக்கெட் அணி தங்கியுள்ள ஹோட்டலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பார்சல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஹோட்டலிலேயே இருக்குமாறு BCCI அறிவுறுத்தியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தின் பர்மிங்காமில் தங்கி இருந்த இந்திய அணி வீரர்கள் வழக்கம்போல் ஹோட்டலுக்கு அருகிலுள்ள பிராட் ஸ்ட்ரீட் போன்ற இடங்களை சுற்றிப் பார்க்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சென்டனரி சதுக்கத்தில் சந்தேகத்திற்கிடையான ஒரு பார்சல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களால் அவர்கள் வெளியே செல்ல […]

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு சீராக இல்லை எனவும், […]

2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் தமிழில் வெளியாகிய பல திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையும், வரவேற்புகளையும் பெற்றுள்ளன. இவற்றில் சில படம் திரையரங்குகளில் மட்டுமல்ல, OTT தளங்களிலும் வெற்றி கண்டுள்ளன. இந்நிலையில், இந்நேரம் வரை வசூல் அடிப்படையில் முன்னணியில் உள்ள 5 தமிழ் திரைப்படங்களை பார்க்கலாம். முதல் இடம்: குட் பேட் அக்லி: 2025 ஆம் ஆண்டில் தமிழில் வெளியாகி மிகப்பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக திகழ்கிறது ‘குட் பேட் […]

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் கடைகளில் இருந்து சமோசாக்களை லஞ்சமாக வாங்கி கொண்டு வழக்கை முடித்து வைத்ததாக சிறுமியின் தந்தை மனுதாக்கல். கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று 14 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரேஷ் என்பவர் சிறுமியை பக்கத்தில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து […]

தமிழ்நாட்டை உலுக்கிய அஜித்குமார் மரணம் லாக் அப் டெத் கிடையாது. இதை சாத்தான்குளம் சம்பவத்தோடு ஒப்பிட முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மதுரை அருகே திருப்புவனம் பகுதியில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலியில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். திருட்டு வழக்கு தொடர்பாக இவரை விசாரிக்க போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதன்பின் அவரது வீடுகளில் சோதனை மேற்கொண்ட போலீசார், இவரின் தம்பியையும் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் […]