புதிய புதிய FASTag விதிகளின்படி ரூ.3000 ரீசார்ஜ் செய்து வருடம் முழுவதும் 200 முறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம். சுங்கவரி வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் விதிகளை அரசாங்கம் அவ்வப்போது மாற்றுகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்துகின்றனர். புதிய கொள்கையின் கீழ், வாகன உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி ஆண்டு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க முடியும். இந்த அமைப்பு சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, எரிபொருளையும் […]
இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 585 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 6-வது நாளாக இன்று புதன்கிழமையிலும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் […]
ADGP ஜெயராம் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞருக்கும் தேனியை சேர்ந்து பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்தது. இதில் அந்த பெண்ணை மீட்பதற்காக, அந்த இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. […]
தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி, பா.ம.க., உடன் உறவை முறித்து கொண்டது, நாங்கள் ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவு. நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பா.ம.க., வன்னியர்களையும், தங்களுக்கு சாதகமாக, கட்சியின் நலனுக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள். தலித்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அவர்கள் கையில் எடுத்தார்கள். முதலில் […]
இணையத்தில் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் வைரலாகி வரும். உலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் என்ன நடக்கின்றதோ அதை அடுத்த நொடியே சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அப்படி தான் தற்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. பொதுவாக அனைவரும் பாம்பு என்றால் பயந்து நடுங்குகிறோம். ஆனால் அந்த வீடியோவில் ஒரு சிறுவன் பாம்பின் வாலை பிடிக்க முயற்சி செய்கிறார். திடீரென மற்றொரு சிறுவன் அங்கு வந்து பாம்பை பிடித்து தூக்க […]
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த நோயால் பலர் உயிரிழக்கின்றனர். சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை இல்லாததால் இன்று பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இன்று பல வகையான புற்றுநோய்களுக்கு திறம்பட சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக, சரியான நேரத்தில் நோயறிதல் செய்யப்பட வேண்டும். அறிகுறிகள் தோன்றி பரிசோதனை செய்யப்படும்போது மட்டுமே புற்றுநோயின் வகையைக் கண்டறிய முடியும். இருப்பினும், கால்களிலும் புற்றுநோய் […]
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியதிலிருந்து இது 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். 2011 ஆம் ஆண்டு கடைசியாக நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை […]
காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு பெண், திடீரென கணவரும் மாமியாரும் போலீசாருடன் வந்ததை பார்த்ததும் ஹோட்டல் சுவரில் இருந்து குதிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் பராத் பகுதியில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் அந்த பெண் தனது கள்ள காதலனுடன் தங்கியிருந்தார் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெண்ணின் கணவர் குடும்பம் போலீசாருடன் ஹோட்டல் அறைக்கு வந்தனர். […]
சென்னையில் முதல் கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் தொடங்கி வைக்கிறார். இதன் சிறப்பம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், சென்னை மாநகராட்சி புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மெரினா கடற்கரையில் தொடங்கி வைக்க உள்ளார். மக்கள் […]
இந்தோனேசியாவில் லக்கி-லக்கி என்ற எரிமலை வெடித்து, காற்றில் 11 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் மேகத்தை பரப்பியது, இதனால் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை செவ்வாய்க்கிழமை பெரிய அளவில் வெடித்துள்ளது. இந்த வெடிப்பால் காற்றில் 11 கிமீ உயரத்திற்கு சாம்பல் மேகம் பறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அதிகபட்ச எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா 270 மில்லியன் […]

