மூதாட்டி ஒருவர் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டையால் மீண்டும் ஓ.சி. பேருந்து சர்ச்சை சம்பவம் வெடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் விராலிமலைபட்டியில் லட்சமி என்ற மூதாட்டி ஒருவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். அவர், தான் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டையுடன் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்க வந்த பரிசோதகர் சுப்பிரமணியன் மூட்டையை பார்த்துவிட்டு உங்களுக்குத்தான் இலவசம், மூட்டைக்கு இல்லை என கூறிவிட்டு ரூ.15 கட்டணமாக வசூலித்துள்ளார். அதைத் தொடர்ந்து […]
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களுக்கு மழை வெளுத்து வாங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது. பருவ மழை தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் மிக கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளது. […]
தனிமையில் வசித்து வரும் தம்பதியினரிடையே ஒரு பிரியாணிக்காக நடந்த வாக்குவாதத்தில் ஏற்பட்ட சண்டை முற்றியதில் மனைவியை தீ வைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரத்தில் வசித்து வந்தவர்கள் கருணாகரன்(75), பத்மாவதி (65) தம்பதியினர். கருணாகரன் ரயில்வேயில் வேலை பார்த்தவர். இவர்களுக்கு குமார்(46), மகேஸ்வரி(50), ஷகிலா(44), கார்த்திக் (40 என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் கருணாகரன் – பத்மாவதி தம்பதியினர் […]
ஒருவேளை செமி ஃபைனல் போட்டி ரத்தானால் நேரடியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா , இங்கிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில் நாளை நியூசிலாந்து அணி பாகிஸ்தானுடன் மோதுகின்றது. வருகின்ற 10ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த போட்டியில் ஒரு வேளை மழை தடை செய்தால் என்ன ஆகும் […]
இலங்கையில் இருந்து தப்பித்து சென்றபோது பிலிப்பைன்ஸ் கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் 306 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இலங்கையைச் சேர்ந்த 306 பேர் கப்பலில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் –வியட்நாம் இடையே நள்ளிரவு கப்பலின் அடிப்பகுதி சேதமடைந்து அபாய கட்டத்தில் இருந்துள்ளது. இதையடுத்து அதில் […]
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6503 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என கூட்டுறவுத்துறை ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். […]
திருவண்ணாமலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை திருடுவதற்காக கடையின் சுவரில் ஓட்டை போட்டு கைவரிசை காட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த நாயுடு மங்கலம் கூட்ரோட்டிலிருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் வடபுழுதிவுர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். அண்ணாமலை,வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையில் டாஸ்மாக் […]
திரிபுராவில் செல்போனில் படம் பார்த்துக் கொண்டே இருந்ததால் தாத்தா கண்டித்ததால் வீட்டில் இருந்த 4 பேரையும் 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டம் கமால்பூர் அடுத்த ஷிப் பாரி என்ற கிராமத்தில் வசிப்பவர் பாதல் தேப்நாத்(70) , இவரது மருமகள் சுமிதா தேப்நாத் (42), பேத்தி சுபர்ணா தேப்நாத் (10) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தேப்நாத்தின் 15 வயது […]
தெலுங்கு மொழியில் நடிகர் அர்ஜுன் இயக்க உள்ள திரைப்படத்தில் அவர் மகளுடன் நடிக்க மறுப்பு தெரிவித்ததால் கேவலப்படுத்திவிட்டார் என்று கதாநாயகன் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். தன் மகள் ஐஸ்வர்யாவை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்கி தயாரிக்கின்றார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு பட கதாநாயகர் விஷ்வக் நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடக்க இருந்த நிலையில் ஹீரோ வரவில்லை என்றும் […]
நமது முன்னோர்கள் பல்லாண்டு காலமாக மூலிகைகளின் பண்பை தெரிந்து பயன்படுத்தி எளிதில் நலம்பெற உதவும் உத்திகளைக் கையாண்டு வந்தனர். இன்று நம்மைச் சுற்றி பல மூலிகைகள் வளர்ந்திருந்தாலும் நமக்கு பயன்தெரியாது. அதனால் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. மேலும், முறையாக வளர்த்து தினமும் சிறிய அளவில் பயன்படுத்த வேண்டிய அற்புத மூலிகைகள் பல உள்ளன. வீட்டைச்சுற்றி இடமிருப்பின் நிலத்திலோ, தோட்டமிருப்பின் ஒரு சிறுபகுதியிலோ மூலிகைப்பூங்கா அமைத்தால் ஊரிலுள்ள எல்லோருக்கும் நன்மைகள் கிடைக்கும். வீட்டில் […]