விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜ்கோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீ பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். தற்போது, அவரது இறுதிச் சடங்குகளுக்கான […]
ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியாவின் கோரிக்கைக்கு ஈரான் அரசாங்கம் திங்களன்று ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்களில் பெரும்பாலோர் மருத்துவம் மற்றும் மதத்துடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆகும். தற்போதைய மோதலால் ஈரானிய வான்வெளி மூடப்பட்டுள்ளதாலும், இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நில எல்லைகள் அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக பயன்படுத்த முடியும் என […]
மகாராஷ்டிராவின் டவுண்ட் சந்திபிலிருந்து புனே சென்ற DEMU பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் டவுண்ட் சந்திபிலிருந்து புனே சென்ற DEMU பயணிகள் ரயிலில் ரயிலின் கழிப்பறையில் லேசான தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள் அலறியப்படி வெளியேறினர். காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் […]
இந்தியாவில் 2011-க்குப் பிறகு நடைபெறும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, முழுமையாக டிஜிட்டல் வடிவத்தில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் கட்டமான வீட்டுப்பட்டியலிடல் நடவடிக்கை (House Listing Operation – HLO), 2026 அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதில் வீட்டு வசதிகள், சொத்து உரிமை, வீட்டு வருமானம் உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்படும். இந்தக் […]
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட உடனேயே, அது விபத்தில் சிக்கி ஒரு கட்டிடத்தில் மோதியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும், விமானத்தில் உள்ள ஒவ்வொரு பயணிக்கும் பாதுகாப்பிற்காக ஏன் ஒரு பாராசூட் வழங்கப்படவில்லை என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. விமான விபத்து சம்பவத்திற்குப் […]
திருவையாறு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல திருமணவிழாவில் பங்கேற்று மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் நீதியன்றம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர். இந்தியாவில் சுயமரியாதை திருமணங்களை முதலில் அங்கீகரித்தது தமிழ்நாடு தான் என பெருமிதத்தோடு கூறினார். மேலும் […]
மாற்றம் என்பது இயற்கையானது. ஆனால், அந்த மாற்றத்தை எதிர்கொள்வது எப்படி என்பது மனிதர்களின் மனப் பெருமைக்கு சான்றாக அமையும். ஜப்பானின் ஷிகொக்கு தீவில் உள்ள நகோரோ கிராமம் இன்று உலக கவனத்தை ஈர்த்து வருகிறது.. அது மக்கள் தொகையால் அல்ல, மனித வடிவ பொம்மைகளால். ஒருகாலத்தில் மக்கள் திரண்டுகொண்டிருந்த இந்த கிராமம், தொழில்கள் முடங்கியதனால் காலப்போக்கில் வெறிச்சோடி விட்டது. இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கு புறப்பட்டனர். இறுதியில், வயோதிபர்கள் மட்டுமே […]
சொத்துப் பத்திரம் பதிவு செய்த பிறகு, அந்த ஆவணத்தில் பெயர், முகவரி, விலை, சர்வே எண் உள்ளிட்ட விவரங்களில் தவறு இருந்தால், அந்த பிழைகள் பின்னாளில் பெரிய சட்ட பிரச்சனைகளாக மாறக்கூடும். இவ்வாறு பிழை ஏற்பட்டால், அதை திருத்தும் வழிமுறைகள் குறித்து இப்போது விழிப்புணர்வு தேவைப்படுகிறது. பொதுவாக பத்திரத்தில் உள்ள பிழைகளை திருத்த, “பிழை திருத்தல் பத்திரம்” எனப்படும் Rectification Deed பதிவு செய்யப்படுகிறது. இது, உரிமையாளராக இருந்த விற்பனையாளர் […]
நேற்று நடந்த குரூப்-1 தேர்வில் திமுக குறித்த கேள்வி சர்ச்சையாகியுள்ளது. எதிர்கட்சிகல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நியமிக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பினை எதிர்பார்த்து படித்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் 72 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி […]
இஸ்ரோவில் பணியாற்றிய புகழ்பெற்ற முன்னாள் விஞ்ஞானியும், தமிழறிஞருமான நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் சிறப்பாக பங்களித்த இவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கல்வி, அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில் அவர் எழுதிய நூல்கள் தமிழ் வாசகர்களிடையே பெரும் […]

